காஷ்மீரில் இனி பாகிஸ்தானின் பருப்பு வேகாது... தோடாவில் ஹிஸ்புல் கமாண்டர் கொலை..!!!

இன்று காஷ்மீரில்  பாகிஸ்தானிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஹிஸ்புல் கமாண்டர் மசூத் அனந்த்நாகில் இராணுவத்தால் கொல்லப்பட்டார்.

Last Updated : Jun 29, 2020, 06:54 PM IST
  • ஹிஸ்புல் கமாண்டர் மசூத் தோடாவில் கொல்லப்பட்டார். இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
  • அவரிடம் இருந்து பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
  • காஷ்மீரில் பயங்கரவாதத்தை பரப்பிய பாகிஸ்தான், தான் மூட்டிய நெருப்பில் தானே மாட்டிக் கொண்டது.
காஷ்மீரில் இனி பாகிஸ்தானின் பருப்பு வேகாது... தோடாவில் ஹிஸ்புல் கமாண்டர் கொலை..!!! title=

ஹிஸ்புல் கமாண்டர் மசூத் தோடாவில் கொல்லப்பட்டார். காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டி விட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகும்.

தோடாவில் வசிக்கும் ஹிஸ்புல் (Hizbul) கமாண்டரான மசூத், அனந்த்நாக் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை நடந்த மோதலில் கொல்லப்பட்டார். தோடா மாவட்டத்தில் மிஞ்சியிருந்த கடைசி பயங்கரவாதி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பாகிஸ்தான் பெரும் அதிர்ச்சியில் உள்ளது. இனி காஷ்மீரில் தனது பருப்பு வேகாது என்பதை பாகிஸ்தான் நன்றாக உணர்ந்து விட்டது.

புதுடெல்லி (New Delhi): இன்று காஷ்மீரில் (Kashmir), பாகிஸ்தானிற்கு (Pakistan) பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் நிகழ்வு நடந்துள்ளது. ஏனெனில் இன்று ஜம்முவின் தோடா பகுதியும் பயங்கரவாதம் இல்லாத பகுதியாகிவிட்டது. ஹிஸ்புல் கமாண்டர் மசூத்  (Masood),  அனந்த்நாகில் இராணுவத்தால் கொல்லப்பட்டார். இதனால், ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டம் மீண்டும் பயங்கரவாதம் இல்லாத பகுதியாக ஆகி விட்டது. தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டனர் என கூறலாம். மசூத் இடமிருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

ALSO READ | தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்த காங்கிரஸ்... லடாக் கவுன்சிலர் அதிர்ச்சி தகவல்...!!!

பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டதைக் கண்டு, இனி பாகிஸ்தானின் பருப்பு இங்கு வேகாது என்பதை நினைத்து பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி அதிர்ச்சியில் உள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதத்தை பரப்பிய பாகிஸ்தான், தான் மூட்டிய நெருப்பில் தானே மாட்டிக் கொண்டது என்பது தான் உண்மை நிலை. பாகிஸ்தானின் கராச்சி பங்குச் சந்தையில் இன்று காலை பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கினர். இந்த தாக்குதலில், போலீஸ்காரர் ஒருவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில், 7 பேர் காயமடைந்தனர். இது தவிர, நான்கு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை இராணுவம் (Baluch Liberation Army) பொறுப்பேற்றுள்ளது.

ALSO READ |அதிர்ச்சி தகவல்... வயிற்று வலியால் தான் ஆண் என்பதை உணர்ந்த மணமான பெண்..!!!

பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்து இந்தியாவிற்கு தலைவலியை ஏற்படுத்தி வந்த பாகிஸ்தான் இப்போது தான் விரித்த வலையில் தானே சிக்கிக் கொண்டது என்று தான் கூற வேண்டும். 

Trending News