பெற்றோர் மொபைலை ஹாக் செய்து மிரட்டும் 13 வயது சிறுவன்; ஆன்லைன் கேமிங்கால் வந்த வினை

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 13 வயது சிறுவன் தனது பெற்றோரின் சமூக வலைதள கணக்குகளில் இருந்து ஆபாசமான உள்ளடக்கத்தை பதிவிட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 22, 2022, 04:38 PM IST
  • ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையான சிறுவன் தனது பெற்றோரின் மொபைல் போன்களையே ஹேக் செய்துள்ளான்.
  • வீட்டில் கேமராக்கள், சிப்ஸ் போன்றவற்றையும் பொருத்திய சிறுவன்.
  • போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
பெற்றோர் மொபைலை ஹாக் செய்து மிரட்டும் 13 வயது சிறுவன்; ஆன்லைன் கேமிங்கால் வந்த வினை title=

ஜெய்ப்பூரில் 13 வயது சிறுவன் தனது பெற்றோரின் சமூக வலைதள கணக்குகளில் இருந்து ஆபாசமான தகவல்களை பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையானவர் தனது பெற்றோரின் மொபைல் போன்களையும் ஹேக் செய்து, சாதனங்களில் இருந்து முழுத் தரவையும் அழித்துவிட்டார். 

அது மட்டும் இல்லை, அவர் தனது பெற்றோரை சமூக ஊடகங்கள் வழியாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு, இது தங்கள் மகனின் செயல் என தெரியவில்லை. யாரோ மூன்றாம் நபர் தான் ஹேக்கிங் செய்து மிரட்டுக்கிறார் என நினைத்து இது  குறித்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீஸார் நடத்திய பின் தங்கள் மகன் தான் இதற்கு காரணம் எனத் தெரியவந்தது. தங்கள் தொலைபேசியின் திரைகளில் அவ்வப்போது விசித்திரமான அனிமேஷன்கள் தோறுவதாக, பெற்றோர்கள் சைபர் செல்லிடம் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | ‘சுப்ரமணியபுரம்’ பட பாணியில் அரங்கேறிய கொலை !

ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனரட்டின் சைபர் நிபுணர் முகேஷ் சவுத்ரி இது குறித்து கூறுகையில், பெற்றோர்கள் தங்கள் வீட்டின் சுவர்களில் சிப்ஸ் மற்றும் புளூடூத் இயர்போன்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டறிந்த நிலையில்,  இந்த சாதனங்களை வேறு யாரோ தங்கள் குடும்பத்தை கணக்கணிக்க செய்துள்ளனர் என அவர்கள் நினைத்தனர். 

எனினும் விசாரணையில் அனைத்து வினோத சம்பவங்களுக்கும் அவர்களின் மகன் தான் காரணம் என சைபர் செல் துறை கண்டறிந்துள்ளது.  சிறுவனின் மாமாவுக்கு சொந்தமான ஸ்மார்ட்போனில் இருந்து ஆபாசமான உள்ளடக்கம் வெளியிடப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர். சிறுவன் தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.

இது குறித்து பெற்றோர்கள் காவல் துறையிடம் கூறியபோது, ​​​​குடும்ப உறுப்பினர்களிடம் தங்கள் மகனின் செயல்பாடுகளைக் கண்காணிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம் என்று கூறியதாக காவல் துறை அதிகாரி கூறினார். சிறுவனை கடுமையாக விசாரித்தபோது, ​​​​ஒரு ஹேக்கரின் உத்தரவின் பேரில் இதைச் செய்ததாக கூறினார்.  ஆனால் பின்னர் தானே எல்லாவற்றையும் செய்தேன் என்பதை ஒப்புக் கொண்டார் என காவல் துறை அதிகாரி தெரிவித்தார். எனினும் போலீசார் இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

மேலும் படிக்க | நீங்களும் ஜெயிக்கனுமா ? - பிரக்ஞானந்தா சொன்ன வின்னிங்க் ட்ரிக்ஸ் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News