கர்நாடக சட்டப்பேரவையில் வரும் ஜூலை 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரி பாஜக-வினர் அமளியில் ஈடுப்பட்டனர். பாஜக எம்எல்ஏக்-களின் அமளியால் கர்நாடக சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை சமாதானப்படுத்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது. இதில், முதல்வர் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக கோரிக்கை விடுத்தது அமளியில் ஈடுப்பட்டனர். பாஜக எம்எல்ஏக்-களின் அமளியால் கர்நாடக சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் அளித்ததால் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ராஜினாமா முடிவை வாபஸ் பெறப்போவதாக அறிவித்த நாகராஜும் மும்பைக்கு சென்று அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் இணைந்துவிட்டார். மேலும், ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று எம்.எல்.ஏ சோமசேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Siddaramaiah, Congress: Discussion on vote of confidence will be taken up on Thursday at 11 am in Karnataka Assembly. pic.twitter.com/bXDJIHbGqX
— ANI (@ANI) July 15, 2019
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது. அதேசமயம் காங்கிரஸ் தலைவர்களை பார்க்க விருப்பமில்லை என்றும் அவர்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பில் மும்பை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2 நாள் விடுமுறைக்கு பின் சட்டப்பேரவை இன்று குடியது. சட்டபேரவை கூட்டத்தில் முதல்வர் குமாரசாமி அரசு மீது உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி பாஜக வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.