ராய்காட் மாவட்டத்தில் ICG ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது!

ராய்காட் மாவட்டத்தில் முருட் நந்த்கோனுக்கு அருகே இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது! 

Last Updated : Mar 10, 2018, 05:02 PM IST
ராய்காட் மாவட்டத்தில் ICG ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது! title=

மும்பை: ராய்காட் மாவட்டத்தில் முருட் நந்த்கோனுக்கு அருகே இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது! 

ஹெலிகாப்டரில் நான்கு பேர் பயணித்துள்ளனர், இவர்களில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும் ஒரு பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

விமானம் இறங்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹெலிகாப்டரில் ஏற்பட்ட சிறு தொழில்நுட்ப கோளாரே விபத்துக்கு காரணமாக இருகலாம் என சந்தேகிக்கப் படுகின்றது.

தரையிரங்கும் நேரத்தில் ஹெலிகாப்டர் தரையில் தட்டுப்பட்ட போதே விபத்திற்கான அறிகுறியினை பயணிகள் அறிந்துள்ளனர். இதுகுறித்து இந்திய கப்பல் துறை தெரிவிக்கையில், விபத்து நடைப்பெற்ற இடத்திற்கு மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விபத்தானது மும்பையின் தெற்கு பகுதியில் சுமார் 160 கிமி தொலைவில் பிற்பகல் 2.40 மணியளவில் நடைப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய கடலோர காவல்படியின் சேதக் ஹெலிகாப்டர் என்பது ஒரு உயர் செயல்திறன் விமானமாகும், இது ICG-ன் தேடுதல் மற்றும் மீட்பு, காரணமளித்தல், மாசுபடுதல், விமானப் பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இது பிரான்சில் வடிவமைக்கப்பட்ட, உற்பத்தி செய்யப்படும் ஆலூட்டே II இன் மேம்பட்ட பதிப்பு, இப்போது HAL லிமிடெட் உரிமத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகிறது.

Trending News