இந்திய கடற்படையில் இணைய உள்ள நவீன நீர்மூழ்கி கப்பலான INS காந்தேரி

உலகில் உள்ள மிகச்சிறந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இணையான வலிமைக்கொண்ட ஐ.என்.எஸ்.கந்தேரி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 10, 2019, 11:51 AM IST
இந்திய கடற்படையில் இணைய உள்ள நவீன நீர்மூழ்கி கப்பலான INS காந்தேரி

புதுடெல்லி: செப்டம்பர் 28 ஆம் தேதி இந்திய கடற்படைக்கு இரண்டு புதிய ஆயுதங்கள் கிடைக்கும். இந்தியாவில் கட்டப்பட்ட கல்வாரி வகுப்பின் இரண்டாவது வகை நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ்.கந்தேரி (INS KHANDERI)  கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. உலகில் உள்ள மிகச்சிறந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இணையான வலிமைக்கொண்டது. இந்த நீர்மூழ்கி கப்பல் கடலுக்குள் இருந்தபடியும், கடலின் மேற்பரப்புக்கு வந்தும் எதிரிகளின் கப்பல்களை ஏவுகணையை வீசி தாக்கும் திறன் கொண்டது. இந்த நீர்மூழ்கி போர்க்கப்பல் அனைத்து விதமான சூழலிலும், வெப்பமான காலங்களிலும் இயங்கும் தன்மை கொண்டது. இதுபோன்ற மொத்தம் 7 போர் கப்பல்கள் தயாரிக்கப்படும். அவற்றில் நான்கு மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்திலும், மற்ற மூன்று கொல்கத்தாவில் உள்ள ஜி.ஆர்.இ.சி.கப்பல் கட்டும் தளத்திலும் தயாரிக்கப்பட உள்ளது.

கல்வாரி வகையின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ் கல்வாரி 14 டிசம்பர் 2017 அன்று கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதுபோன்ற மொத்தம் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையின் மஸ்கான் டாக் லிமிடெட்டில் தயாரிக்கப்பட உள்ளன. இந்த நீர்மூழ்கி கப்பல் பிரான்சின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டு வருகிறது, இது உலகின் மிகச்சிறந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவை கடலுக்கு அடியில் மணிக்கு 37 கிலோமீட்டர் (20 கடல் மைல்) வேகத்திலும், மேற்பரப்பில் 20 கிலோமீட்டர் (11 கடல் மைல்) வேகத்திலும் இயக்க முடியும்.