கனேடியர்களுக்கு விசா சேவை நிறுத்தம்: செக் வைத்த இந்தியா... அதிகரிக்கும் தீவிரம்

India Canada Row: "செயல்பாட்டு காரணங்களால்... இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன" என கனடாவில் உள்ள ஆன்லைன் விசா விண்ணப்ப மையங்களை நிர்வகிக்கும் BLS இன்டர்நேஷனல் இன் அறிவிப்பு தெரிவிக்கின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 21, 2023, 01:20 PM IST
  • கனேடியர்களுக்கு விசா சேவையை தற்காலிகமாக நிருத்தியது இந்தியா?
  • செயல்பாட்டு காரணங்களால் நிறுத்தப்பட்டதாக தகவல்.
  • இந்தியா கனடா இடையில் அதிகரிக்கும் பதற்றம்.
கனேடியர்களுக்கு விசா சேவை நிறுத்தம்: செக் வைத்த இந்தியா... அதிகரிக்கும் தீவிரம் title=

இந்தியா கனடா இடையில் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், கனேடிய குடிமக்களுக்கு விசா வழங்குவதை இந்தியா "அடுத்த அறிவிப்பு வரும் வரை" நிறுத்தி வைத்துள்ளது. "செயல்பாட்டு காரணங்களால்... இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன" என கனடாவில் உள்ள ஆன்லைன் விசா விண்ணப்ப மையங்களை நிர்வகிக்கும் BLS இன்டர்நேஷனல் இன் அறிவிப்பு தெரிவிக்கின்றது. 

காலிஸ்தான் சார்பு சீக்கிய பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் புது தில்லி முகவர்களின் தொடர்புகள் உள்ளதாக கூறும் "நம்பகத்தன்மை வாய்ந்த குற்றச்சாட்டுகள்" தங்களிடம் இருப்பதாக கனடா தெரிவித்த நிலையில், இந்தியா கனடா இடையிலான உறவுகளில் விரிசல்கள் விழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இது அபத்தமான, உள்நோக்கங்கள் கொண்ட செயல் என விவரித்து இதை நிராகரித்துள்ளது.

விசாக்களின் இடைநிறுத்தம் இந்த விவகாரத்துடன் தொடர்புடையதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய உரையாடலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் ஏற்கனவே பதட்டமாகத்தான் இருந்தன.

அந்நாட்டில் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வது குறித்து இந்தியாவின் வலுவான கவலைகளை அப்போது இந்திய பிரதமர் கனேடிய பிரதமரிடம் தெரிவித்தார்.

திங்களன்று, ட்ரூடோ, கனேடிய குடிமகனாக இருந்த நிஜ்ஜாரை "இந்திய அரசாங்கத்தின் முகவர்கள்" படுகொலை செய்ததாகத் தங்கள் அரசின் பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பதாகக் கூறினார்.

"கனேடிய மண்ணில் கனேடிய குடிமகன் ஒருவரைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் ஏற்றுக்கொள்ள முடியாத இறையாண்மை மீறலாகும். இது சுதந்திரமான, ஒளிவுமறையற்ற மற்றும் ஜனநாயக சமூகங்கள் கடைபிடிக்கும் அடிப்படை விதிகளுக்கு முரணானது" என்று திரு ட்ரூடோ கூறியிருந்தார்.

மேலும் படிக்க | இந்தியா பக்கம் உலக நாடுகள்: தனிமைப்படுத்தப்பட்ட கனடா.. காரணம் என்ன?

இதற்கிடையில் இந்திய அரசாங்கம் கனேடிய பிரதமரின் குற்றச்சாட்டுகளை "முற்றிலும் ஆதாரமற்றவை” என நிராகரித்தது. அப்படிப்பட்டவர்களுக்கு கனடாவின் அரசியல் பிரமுகர்கள் பகிரங்கமாக அனுதாபத்தை வெளிப்படுத்துவது குறித்த தனது கவலைகளையும் இந்தியா அடிக்கோடிட்டுக் காட்டியது.

"இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், காலிஸ்தானி பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து கவனத்தை மாற்ற முயல்கின்றன. அவர்களுக்கு கனடாவில் அடைக்கலம் அளிக்கப்பட்டு வருகின்றது. அவர்கள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் கனேடிய அரசின் செயலற்ற தன்மை நீண்டகால மற்றும் தொடர் கவலையாக உள்ளது," என்று வெளியுறவு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தலா ஒரு மூத்த அதிகாரியை வெளியேற்றின, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (RAW) மூத்த அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஒட்டாவா உத்தரவிட்டது. செவ்வாயன்று, கனடாவின் உயர்மட்ட தூதர் ஒருவரை "நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டதற்காகவும், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும்" இந்தியா வெளியேற்றியது. 

இதற்கிடையில், இந்திய-கனடா உறவுகள் குறித்து விவாதிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் புதன்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

முன்னதாக கனடாவில் உள்ள பாதுகாப்பு அபாயங்கள் குறித்து இந்தியா வெளியிட்ட பயண அறிவுறுத்தலை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. கனடா உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்று என்று கூறியுள்ள கனடா அரசாங்கம், காலிஸ்தானி பிரிவினைவாத தலைவரின் கொலை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ராஜ்ஜீய மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அமைதியாக இருக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

மேலும் படிக்க | கனடாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News