புதுடில்லி: நாட்டின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிபின் ராவத் அரசாங்கத்தின் மிகப்பெரிய இராணுவ ஆலோசகராக இருப்பார். டிசம்பர் 31 ஆம் தேதி ஜெனரல் பிபின் ராவத் பொறுப்பேற்க உள்ளார். அதே நாள் (டிசம்பர் 31) தற்போது இருக்கும் இராணுவத் தளபதி பொறுப்பில் இருந்து நாளை பிபின் ராவத் ஓய்வு பெறுகிறார். அவருக்குப் பிறகு, லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நர்வானே ராணுவத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
டிசம்பர் 24 அன்று முப்படை தலைமை தளபதி பதவியை (CSD) உருவாக்க மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்ததுடன், அஜித் தோவல் குழு அளித்த பரிந்துரையையும் ஏற்று கொண்டது. அதன் கீழ் 4 நட்சத்திர அந்தஸ்து கொண்டவராகவும், பாதுகாப்பு விவகாரங்கள் துறைத் தலைவராகவும் இருப்பார். இந்த விவகாரங்களில் மத்திய அரசின் ஆலோசகராகவும், முப்படைகளையும் ஒத்திசைத்து செயலாற்றுபவராக இருப்பார் எனவும் பரிந்துரை செய்யப்பட்டது. இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் கட்டளை மற்றும் பிரிவுகளை முப்படை தலைமை தளபதி (சிடிஎஸ்) நேரடியாக கட்டுப்படுத்த அதிகாரம் இல்லை என்று மத்திய அரசாங்கம் தெளிவுபடுத்தி உள்ளது.
Defence Ministry: Army Chief General Bipin Rawat has been appointed as the first Chief of Defence Staff of the country. pic.twitter.com/YqakbJrcZY
— ANI (@ANI) December 30, 2019
முப்படை தலைமை தளபதி (சி.டி.எஸ்) 65 வயது வரை பணியாற்ற முடியும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. மத்திய அரசு பாதுகாப்புத் தளபதியின் சேவையை பொது நலனில் மேலும் தேவை என்று கருதினால் அதை நீட்டிக்க முடியும்.
ஜெனரல் பிபின் ராவத் டிசம்பர் 31 ஆம் தேதி இராணுவத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார். தற்போதைய விதிகளின்படி, முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் இன்னும் மூன்று ஆண்டுகள் வரை பணியாற்ற முடியும். தற்போது அவருக்கு 62 வயது ஆகிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது