ஏற்றுமதிக்கு வங்கியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட காப்பீட்டுத் தொகையை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கபடுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!
இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது என்றும் வலுவான அன்னிய நேரடி முதலீடு மற்றும் அதிக அந்நிய செலாவணி இருப்புடன் புத்துயிர் பெறுவதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர்; நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் மிக பிரகாசமாக தெரிவதாகவும் அவர் தெரிவித்தார். தொழில் நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வரி விதிப்பு முறையில் சில சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பணவீக்கம் 4 சதவீதத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. முதலீடு அதிகரித்து கொண்டு செல்கிறது. இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. உற்பத்தி துறையில் ஏற்பட்ட சிறு சறுக்கலை சரி செய்ய முயற்சி செய்யப்படுகிறது. பகுதி கடன் உறுதி திட்டம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு உள்ளது. தொழிற்சாலை உற்பத்தி அதிகரித்து வருவதற்கான அறிகுறி தெரிகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு போதுமான அளவு உள்ளது. நிறுவனங்களில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன. தொழில் நடைமுறைகள் எளிதாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. 5 முக்கிய துறைகளில் பொருட்கள் நுகர்வு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Inflation under control, clear sign of revival of industrial production: Sitharaman
Read @ANI story | https://t.co/uqwXK5kiur pic.twitter.com/2qo7SyCtuQ
— ANI Digital (@ani_digital) September 14, 2019
தொழில்துறையினருக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுத்துறை வங்கிகளை 19 ஆ தேதி சந்திக்க உள்ளேன். சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி சலுகை அதிகரித்துள்ளது. வரா கடன்களை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வங்கிகளுக்கான வரவு சீராக உள்ளது.
வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்படும். வரி செலுத்துவதில் சிறு தவறுக்கான தண்டனைகள் நீக்கம். உற்பத்தி துறை மீண்டு வருகிறது.சிறுகுறு தொழில் முனைவோருக்கான காப்பீடு அதிகரிக்கப்படும். சிறுகுறு தொழில் துறையினருக்கு அதிக கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜவுளி துறைக்கான புதிய திட்டம் 2020 ஜனவரி 1 ஆம் தேதி துவங்கப்படும். 2020 ஆம் ஆண்டில் நான்கு இடங்களில் மெகா ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.