இந்தியாவில் தற்போது மோடியின் எதேச்சதிகாரம் நடந்த வருகிறது என நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்!
பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், மத்தியில் ஆளும் பாஜக இந்திய ராணுவத்தை தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்துகிறது என தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் தற்போது மோடியின் எதேச்சதிகாரம் நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது பேட்டியில் அவர் காங்கிரஸ் கட்சி அரசியல் சாசனச் சட்டத்தைக் காக்க போராடி வருவதாகவும், இந்திய ஜனநாயகத்தைக் காக்கப் போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேலையுல் இங்கு மத்தியில் பெரிய கார்ப்பரேட்களின் ஆட்சி நடைப்பெற்று வருவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க காங்கிரஸ் கட்சிதான் ஒரே வழி என குறிப்பிட்ட அவர், சிபிஐ, ஆர்பிஐ, நீதித்துறை ஆகியவற்றை காக்க வேண்டும். பாஜக இவற்றை சீரழித்து வருகிறது என தெரிவித்தார். மேலும் இன்று யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் தேச விரோதிகள் என முத்திரை குத்திவிடுகின்றனர். தற்போது ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்தபட்ச வருவாய் திட்டம் வறுமையை ஒழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனவும், ஏழைகளுக்கு உணவு, இளையோருக்கு வேலை வாய்ப்பு என்பதில் மிகந்து கவனம் செலுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜக-வின் 5 ஆண்டுகால ஆட்சியை ஒரு பேரிழிவு என சித்தரித்த சித்து, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பாஜக இன்று அம்பலப்பட்டு நிற்கிறது எனவும் குறிப்பிட்டார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரலாற்று முடிவுகள் என்று விளம்பரப்படுத்திக் கொண்ட பாஜக இன்று ஏன் அதன் தலைவர்கள் அதை வைத்து ஓட்டு கேட்பதில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வளர்ச்சி வளர்ச்சி என்று கூறி வந்த மோடி, தற்போது யாரை வளர்த்துள்ளார், கார்ப்பரேட்களை மட்டும் தான் வளர்த்தார் என தெரிவித்துள்ளார்.
ஊழல் ஆட்சி செய்துவரும் பாஜ தங்களது ஓட்டு வங்கியை பெருக்க எதுவேண்டும் என்றாலும் செய்யும்., அதற்கு உதாரணம் சமீபத்தில் நடைப்பெற்ற புல்வாமா தாக்குதலை கூறலாம். இந்திய ராணுவத்தை பாஜக தனது ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவது முறை தானா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.