ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி தாக்கு..!
பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக - காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர், ரஃபேல் போர் விமானங்களுக்கு அதிக விலை கொடுக்கப்பட்டதா என்பது தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரியவரும் என்று கூறினார்.
ரஃபேல் பேரம் தொடர்பாக சர்ச்சைகள் கேடுபிடியாகி வரும் நிலையில், விரைவில் பிரான்சில் ஒரு குண்டு வெடிக்கும் என்று ராகுல் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்தே ஹாலண்டே தனது குற்றச்சாட்டை முன்வைத்தார். இதைச் சுட்டிக்காட்டியுள்ள ஜெட்லி, இரு நாடுகளின் எதிர்க்கட்சித்தலைவர்கள் ஒரே நேரத்தில் ஒரே குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது எப்படி தற்செயல் என ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
போபர்ஸ் ஊழலில் ராகுல்காந்தியின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழி தீர்க்கும் வகையில் ராகுல் நடந்து கொள்வதாக கூறிய ஜெட்லி, இரண்டு அரசுகளுக்கிடையே நேர்மையான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ரஃபேல் ஒப்பந்தத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி.., உண்மையை அல்லது பொய்யை திரித்து கூறும் திறமையும், சிறப்பும் அருண் ஜெட்லிக்கு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் ஆகியோர் பொய் சொல்வதை விட்டு விட்டு உண்மையை வெளி கொண்டு வர நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஆதரிக்க இயலாதவற்றை ஆதரிப்பதற்காக பொய்களை அள்ளி வீசுவதுதான், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியில் சிறப்பு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Mr Jetlie’s speciality is his ability to spin “2 truths”, or lies, with fake self righteousness & indignation to defend the indefensible. It’s high time he, the RM & our PM stop lying and call a JPC to establish the full, uncorrupted truth about the #RafaleScam. pic.twitter.com/iQxrV5ooN5
— Rahul Gandhi (@RahulGandhi) September 23, 2018