காஷ்மீர்: எல்லைக்கோடு அருகே வியாபாரம் செய்த 2 தொழிலதிபர்கள் வீட்டில் NIA சோதனை

பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கியது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு இன்று சோதனை மேற்கொண்டன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 23, 2019, 01:03 PM IST
காஷ்மீர்: எல்லைக்கோடு அருகே வியாபாரம் செய்த 2 தொழிலதிபர்கள் வீட்டில் NIA சோதனை title=

ஸ்ரீநகர்: பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கியது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு இன்று சோதனை மேற்கொண்டன.

கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி) முழுவதும் வர்த்தகம் செய்த இரண்டு வர்த்தகர்களின் வளாகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தினர். 

புல்வாமா மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜம்மு-காஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து புல்வாமா மாவட்டத்தின் கரார் பகுதியில் உள்ள குலாம் அகமது வானியின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

"ஸ்ரீநகரில் உள்ள பரிம்போரா பழ மண்டியில் மற்றொரு சோதனை நடத்தப்பட்டது" என்று என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன. பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கியது தொடர்பாக என்ஐஏ விசாரணையின் கீழ் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரபல தொழிலதிபர் ஜாகீர் வட்டாலி மற்றும் பல பிரிவினைவாத தலைவர்களை என்ஐஏ அமைப்பு கைது செய்துள்ளது.

 

Trending News