ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தலைநகர் ஸ்ரீநகரிலும் பனிமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக் கிடக்கிறது. வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பனிக்கட்டிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவால், காஸிகுண்ட் பகுதியிலுள்ள ஜவஹர் குகைப் போக்குவரத்து பகுதியின் இரு வாயில்களையும் பனி மூடியதை அடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக, ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை ஐந்தாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது.