நாடுமுழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், கர்நாடக மாநிலம் வால்மிகி சமாஜ உறுப்பினர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தினை மக்கள் தவிரக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்!
நாளை மறுநாள் (டிச., 31) முதல் ஆங்கிலப் புத்தாண்டு இரண்டு நாட்கள் கோளாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கொண்டாட்டம் தவிரக்கப்பட வேண்டுமென கர்நாடக மாநிலம் வால்மிகி சமாஜ உறுப்பினர் ப்ராமந்த் சுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாட்டக மக்களின் புத்தாண்டு, யுகாதி தான் எனவும் அன்றே மக்கள் புத்தாண்டை கொண்டாட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Our new year starts on Ugadi. We are asking that new year should not be celebrated on December 31/January 1, no celebrations at all: Brahmand Swamy,Valmiki Mutt #Bengaluru pic.twitter.com/Fc7o6pyqAQ
— ANI (@ANI) December 29, 2017
யுகாதி பண்டிகையானது கர்நாட்டகா மற்றும் தெலுங்கு மாநில மக்களின் புத்தாண்டு ஆகும். அடுத்து வரும் ஆண்டில் யுகாதியானது மார்ச்.,18 2018 அன்று கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!