Karnataka Cauvery Issue Bandh: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கர்நாடக அரசு காவேரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள் உள்ளிட்டவை கர்நாடக முழுவதும் பல்வேறு முழு அடைப்பு போராட்டத்தை இன்று நடத்தி வருகின்றன. இதனால், அம்மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களின் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பல்வேறு பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டள்ளன.
வெறிச்சோடிய சாலைகள்
கர்நாடக பேருந்து கழகம், பெங்களூரு மாநகராட்சி பேருந்து கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து பேருந்துகளை இயக்கினாலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. ஆட்டோக்களும் பெங்களூரு மாநகரில் பெரிதாக இயக்கப்படாத நிலையில், செயலிகள் மூலம் இயக்கப்படும் ஆட்டோ சேவைகள் மட்டும் இயக்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு - கர்நாடக இடையேயான பேருந்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்ப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கடந்த செப். 13ஆம் தேதி முதல் தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அம்மாநில விவசாயிகள், கன்னட அமைப்புகள், எதிர்க்கட்சிகள் ஆகியோரால் இன்று முழு அடைப்புக்கு முன்னரே அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும் படிக்க | காவிரி விவகராம்: பெங்களூருவில் இன்று முழு அடைப்பு!
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
பெங்களூரு மாநகர மாவட்ட ஆட்சியர் கே.ஏ.தயானந்த் இன்று முழு அடைப்பு காரணமாக நகரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பொது விடுமுறை அறிவித்தார். பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், இதன் கீழ் 5 பேருக்கு மேல் கூடுவது அனுமதிக்கப்படாது என்றும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி தயானந்தா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஸ்டாலின் உருவப்படத்தின் முன் ஒப்பாரி
இந்நிலையில், காவேரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு, கர்நாடகா மாநிலம் ராமநகரில் கர்நாடக பாதுகாப்பு வேதிகே அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரின் உருவப் படத்துக்கு பொட்டு வைத்தும், மாலை அணிவித்தும், திதி கொடுத்தும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். குறிப்பாக, அவர் உருவப்படம் முன்பாக ஆண்களும், பெண்களும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.
#WATCH | Karnataka Rakshana Vedike stage protest over the Cauvery water release to Tamil Nadu, in Karnataka's Ramanagara. pic.twitter.com/BQxGGxUVJE
— ANI (@ANI) September 26, 2023
முன்னதாக, காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவின் கீழ் தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு தினமும் 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை அடுத்து விவசாயிகள் மற்றும் கன்னட ஆதரவு அமைப்புகள் கடந்த வாரம் முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவேரியில் என்ன பிரச்னை?
காவிரி ஆறு கர்நாடகாவின் தலைகாவேரியில் உற்பத்தியாகி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. இதில் நதிநீர் பங்கீடு என்பது நீண்ட காலமாக சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே கடும் உரசல்கள் இருந்து வருகிறது என்பதை மறுக்க இயலாது.
காவேரியில் கர்நாடகாவுக்கு 284.75 டிஎம்சி, தமிழகத்துக்கு 404.25 டிஎம்சி, கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி, மேலும் 10 டிஎம்சி தண்ணீர் நிலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இதில் 4 டிஎம்சி கடலில் தவிர்க்க முடியாத விரயத்திற்காக ஒதுக்கப்படும்.
மேலும் படிக்க | திருப்பதிக்கே லட்டு கொடுத்த திருடன்... தேவஸ்தான பேருந்து திருட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ