கர்நாடகா முதல்வராக எடியூரப்பா நீடிப்பாரா; இன்று விடை கிடைக்கும் என தகவல்

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி  ஆட்சி கவிழ்ந்த பின், எடியூரப்பா தலைமையிலான புதிய பாஜக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றது. கர்நாடகாவின் முதலமைச்சர் எடியூரப்பா பதவி ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த  நிலையில், எடியூரப்பா பதவி விலகக்கூடும் என தொடர்ந்து தகவல்கள் சில நாட்களாக பரவி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 26, 2021, 12:26 PM IST
கர்நாடகா முதல்வராக எடியூரப்பா நீடிப்பாரா; இன்று  விடை கிடைக்கும் என தகவல் title=

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி  ஆட்சி கவிழ்ந்த பின், எடியூரப்பா தலைமையிலான புதிய பாஜக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றது. கர்நாடகாவின் முதலமைச்சர் எடியூரப்பா பதவி ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த  நிலையில், எடியூரப்பா பதவி விலகக்கூடும் என தொடர்ந்து தகவல்கள் சில நாட்களாக பரவி வருகிறது. 

இந்நிலையில், புதிய முதல்வரின் நியமனம் குறித்து  இன்று மாலைக்குள் தகவல் கிடைக்கும்  என்று மாநில முதல்வர் யடியூரப்பா தெரிவித்துள்ளார். சமீப காலமாக சக எம்.எல்.ஏக்கள் பிரச்சனையை எழுப்பி, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரி வருகின்றனர்

குறிப்பாக, கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி. யோகேஸ்வர், கர்நாடக பாஜக MLA-க்கள்  அரவிந்த் பெல்லத்,  பசனகுடா, ஆகியோர் எடியூரப்பாவை பொது தளங்களில் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர். எடியூரப்பாவிற்கு 78 வயதான நிலையில், அவரது வயதை காரணம் காட்டி, வேறு யாரையாவது முதல்வராக நியமிக்கும்படி கோரி வருகின்றனர். 

ALSO READ | ஒலிம்பிக்கில் மூவர்ண கொடி ஏந்தி வீரர்கள் வலம் வந்தது பரவசத்தை தந்தது: பிரதமர் மோடி

 

இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில் தில்லி சென்ற முதல்வர் எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை சந்தித்தார். மேலும், கடந்த வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடியூரப்பா, ஜூலை 26 ம் தேதி முதல்வராக பதவி வகித்ததில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், கட்சித் தலைவர் ஜே.பி.நாட்டா உத்தரவை கடைபிடிக்க தயாராக இருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா "இன்று மாலை பாஜக தலைமையிடமிருந்து முக்கிய தகவல் வரும், அதன் பிறகு நான் பதவியில் இருப்பேனா இல்லையா என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். கட்சித் தலைமை கட்டளையை ஏற்க தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.

கர்நாடக முதலமைச்சராக நான்கு முறை பதவியில் வகித்துள்ள எடியூரப்பா, அதிக முறை மாநில முதல்வராக பதவி வகித்தவர் என்ற பெருமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா? தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: எடப்பாடி பழனிச்சாமி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News