சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து ஜெயலலிதா பெயரை நீக்குமாறு கர்நாடகா அரசு இன்று மனுதாக்கல் செய்ய உள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு கோர்ட் அவருக்கும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது.
கர்நாடக சிறப்பு நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடக சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்தனர். கர்நாடக சுப்ரீம் கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து கர்நாடக அரசு ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு ஏதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது . மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளநிலையில் அடுத்த வாரத்திலேயே தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி உயிரிழந்ததால் அவரது பெயரை வழக்கில் இருந்து நீக்குமாறு கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளது.