காஷ்மீர்: வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் தொழிலாளர்கள்!

Last Updated : Aug 11, 2016, 04:19 PM IST
காஷ்மீர்: வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் தொழிலாளர்கள்! title=

ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு 34-வது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில், இதுவரைக்கும் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 

56-ஆக உயர்ந்துள்ளது. காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்கான் வானி கடந்த மாதம் 9-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து அங்கு வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.

இதன் காரணமாக அப்பகுதியில் முற்றிலுமாக சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் இதனால் அங்கு வசிக்கும் கூலித்தொழிலாளிகள் தங்கள் வாழ்வதாரத்தை இழந்துள்ளனர். 

இதனையடுத்து அவர்கள் இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா உள்ளிட்ட இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.    

Trending News