கொல்கத்தா: கொல்கத்தாவில் (Kolkata) ஒரு பெண், தன் முதலாளி இறந்தவுடன் அவரது ATM கார்டை திருடி அவரது கணக்கிலிருந்து சுமார் 35 லட்சம் ரூபாய் திருடியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் கடந்த 7 ஆண்டுகளாக இறந்தவரின் வீட்டில், வீட்டு வேலை செய்து வந்தார்.
லாக்டௌன் துவங்கிய முதல் வாரத்தில் அந்த நபர் காலமானார்.
குற்றம் சாட்டப்பட்ட பெண் ரீட்டா ராய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ராய் நகாஷிபராவில் வசிப்பவர். இந்தத் திருட்டில், அவருக்கு அவரது மருமகன் ரஞ்சித் முல்லிக் மற்றும் ரஞ்சித்தின் மைத்துனர் சௌமித்ரா சர்க்கார் ஆகியோரும் உதவியுள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் இறந்தவரின் கணகிலிருந்து 34,90,000 ரூபாயை எடுத்துள்ளனர்.
லாக்டௌனின் முதல் வாரத்தில் ரீட்டா ராயின் முதலாளி சத்யநாராயண் அகர்வால் காலமானார். அகர்வால் ப்ரின்ஸ் அன்வர் ஷா சாலையில் உள்ள சிட்டி ஹைவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ரீட்டா சத்யநாராயண் இறந்த பிறகு அவரது கிரெடிட் கார்டை (Credit Card) திருடி, பணத்தை எடுக்கத் தொடங்கினார். லாக்டௌன் காரணமாக இறந்தவரின் குடும்பத்தில் யாரும் வங்கிக்குச் செல்லாததால், இறந்தவரின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுவது யாருக்கும் தெரியவில்லை.
இறந்தவரின் மகன் மற்றொரு பிளாட்டில் தங்கியிருந்தார். இறந்தவர் பயன்படுத்திய மொபைல் எண் இயங்காமல் இருந்ததால், வங்கி அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளை அனுப்பத் தொடங்கியது. ஏடிஎம் பின்னை மறக்காமல் இருக்க, அகர்வாலின் மகன் பின் எண்ணை தன் தந்தையின் ஃபோனுக்கு அனுப்பியிருந்தார்.
ராய் எஸ்எம்எஸ் மூலம் பின் எண்ணை தெரிந்துகொண்டு பணம் எடுக்கத் தொடங்கினார். ஜூன் 1 ஆம் தேதி அகர்வாலின் மகன் அனுராக் வங்கிக்குச் சென்று அவரது கணக்கின் விவரங்களை அறிந்தபோது அந்த பெண்ணின் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தன.
ALSO READ: கருப்பு தோலுக்காக மனையியைக் கொன்ற கணவன்: நிறம் தாண்டி குணம் பார் மனிதா!!
குற்றவாளியை பிடிக்க, ஏடிஎம்களின் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பயன்படுத்தினர். முகக்கவசங்கள் மற்றும் தொப்பிகளை அணிந்த இரண்டு நபர்கள் அகர்வாலின் கணக்கிலிருந்து பணம் எடுத்திருப்பதை இந்த காட்சிகள் வெளிப்படுத்தின.
சிசிடிவி காட்சிகளை அப்பகுதி மக்களிடம் காட்டியும், அப்பகுதியில் முழுவதுமாக தேடுதல் நடவடிகை மேற்கொண்டும், முல்லிக் மற்றும் சர்கார் ஆகிய இரு குற்றவாளிகளை காவல் துறை கண்டுபிடித்தது. இருவரும் தங்கள் வீடுகளிலிருந்து ஆகஸ்ட் 13 அன்று கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு பிரதான குற்றவாளியான ரீட்டா கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி ரூ .27 லட்சத்தை மீட்டனர்.
ALSO READ: மீன் வெட்டும் கத்தியால் கணவரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்த கொடூர மனைவி!!