கேரளாவில் வருகிறது நாய்க் குட்டிகளுக்கான தனி சட்டம்!

வீட்டில் வளர்க்கப்படும் நாய் குட்டிகளுக்கென தனி சட்டம் கொன்டுவரப் படுமென கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!

Last Updated : Feb 7, 2018, 05:27 PM IST
கேரளாவில் வருகிறது நாய்க் குட்டிகளுக்கான தனி சட்டம்! title=

வீட்டில் வளர்க்கப்படும் நாய் குட்டிகளுக்கென தனி சட்டம் கொன்டுவரப் படுமென கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!

இன்று நடைப்பெற்ற கேரள சட்டமன்ற கூட்டத்தினில் CPI(M) கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சி கே சசீந்திரன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் இந்த சட்டத்தினை பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்... கடந்த திங்களன்று வயநாட்டின் குடியிறுப்பு ஒன்றில் வசிக்கும் 65 வயது மதிப்புத்தக்க பெண்மனி தனது அண்டை வீட்டு வளர்ப்பு நாய்குட்டி தாக்கி பலியானார். இச்சம்பவத்தினை அடுத்து கேரளாவில் நாய் குட்டிகளை வளர்பதற்கு அரசிடம் அனுமதி பெரும் வகையில் தனி சட்டம் வகுக்கப்படும் எனவும், அதற்கான விரிவான வரைவை வடிவமைக்கம் பணி நடைப்பெற்று வருவதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இச்சம்பவத்தில் உயிர் இழந்த பெண்மனிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News