மக்களவைத் தேர்தல் 2024: காங்கிரஸ் அல்லாத கூட்டணியா? மம்தா - அகிலேஷ் சந்திப்பு

Non-Congress Alliance: ஆளும் பாஜக-வை அகற்ற அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் ஒன்றிணைய வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு மத்தியில் புதிய மூன்றாவது அணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 17, 2023, 08:06 PM IST
  • பாஜக-வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே குறிக்கோள்
  • எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு மத்தியில் புதிய மூன்றாவது அணி உருவாகுமா?
  • பாஜக மற்றும் காங்கிரஸிடம் இருந்து விலகி இருப்போம் -திரிணாமுல் காங்கிரஸ்.
மக்களவைத் தேர்தல் 2024: காங்கிரஸ் அல்லாத கூட்டணியா? மம்தா - அகிலேஷ் சந்திப்பு title=

Akhilesh Yadav Mets Mamata Banerjee: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று கொல்கத்தா சென்றடைந்தார். கொல்கத்தாவை அடைந்ததும், ஆளும் பாரதிய ஜனதாவை அகிலேஷ் யாதவ் கடுமையாக தாக்கி பேசினார். 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.வை எப்படியும் ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே சமாஜ்வாதி கட்சியின் ஒரே குறிக்கோள் என்று அகிலேஷ் கூறினார். கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் நடைபெறும் தனது கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அகிலேஷ் கலந்து கொள்கிறார் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசவுள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், இடதுசாரிகள், மாநில கட்சிகள் என அனைவரும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. ஆளும் பாஜக-வை அகற்ற அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் ஒன்றிணைய வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு மத்தியில் புதிய மூன்றாவது அணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த நிலையில், மறுபுறம் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவும் பாஜகவுக்கு எதிராக களம் திறந்துள்ளார். பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் இல்லாத கூட்டணி அமைவதற்கு நிச்சயமாக வாய்ப்பே இல்லை என்று காங்கிரஸ் கூறிவருகிறது. 

மேலும் படிக்க: 8 வயதில் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - மனம் திறந்த நடிகை குஷ்பூ!

பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி வருகின்றன. தேசிய கட்சி, மாநில கட்சிகள் ஒன்றாக இணைந்து ஓரணியில் சேர்ந்து வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆளும் பாஜக அரசை வீழ்த்த முடியும். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லாததால், "எங்களை எதிர்க்க வலிமையான எதிரிகள் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை இல்லை. அடுத்த முறையும் நாங்கள் தான்" என பாஜக கூறிவருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவும், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவும் ஒரே மேடையில் காணப்பட்டனர். தற்போது அகிலேஷ் யாதவ் மேற்கு வங்கம் சென்றுள்ளார். இங்கு அவர் முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசவுள்ளார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் அல்லாத கூட்டணியில் தான் அங்கம் வகிப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் இருந்து சிக்னல் கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும் பாஜகவை எதிர்கொள்ள முதல்வர் மம்தா தயாராக உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுதீப் பந்தோபாத்யாய் தெரிவித்துள்ளார். சக்தி வாய்ந்த பிராந்தியக் கட்சிகளுடன் இணைந்து பாஜகவை எதிர்ப்போம். பாஜக மற்றும் காங்கிரஸிடம் இருந்து விலகி இருப்போம் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: பிரமதர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு...?

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், "பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை. மாறாக, மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்க இயக்குநரகம் போன்ற மத்திய அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை துன்புறுத்தவே மத்திய அரசு விரும்புகிறது. நாட்டில் உள்ள அனைவரும் மாற்றத்தை விரும்புகிறார்கள். பாரதீய ஜனதா கட்சி செய்த அளவுக்கு வேறு எந்த கட்சியும் நாட்டுக்கு கேடு செய்திருக்காது என அகிலேஷ் யாதவ் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் பலர் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்றார். 

முதல்வர் மம்தா பானர்ஜியுடனான சந்திப்பில் எதிர்க்கட்சிக் கூட்டணி குறித்து பேசுவீர்களா? என ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அவர் நேரடியான பதில் கூற விரும்பவில்லை. இந்திய மக்கள் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற விரும்புகிறார்கள். இதற்கான திட்டத்தை தயாரிப்பது அவசியம். இது குறித்து விவாதிப்போம் எனப் பதில் அளித்தார்.

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இடையே நடைபெறும் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க: Live In Relationship: லிவ்-இன் ரிலேஷன்ஷிப் அட்ராசிட்டி! அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News