மக்களவை தேர்தலில் போட்டியிடபோவதில்லை: சுமித்ரா மகாஜன்

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.

Last Updated : Apr 5, 2019, 02:55 PM IST
மக்களவை தேர்தலில் போட்டியிடபோவதில்லை: சுமித்ரா மகாஜன் title=

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார். தனது இந்தூர் தொகுதிக்கு பாஜக வேட்பாளரை அறிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார். இந்த தொகுதியில் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Trending News