கடன் தொல்லை மிகுதியால் ஒரு குடும்பமே கொலை செய்யப்பட்ட கொடூரம்!

கடன் தொல்லை மிகுதியால் ஹைதராபாத்தை சேர்ந்த நபர் தன் குடும்ப நபர் அனைவரையும் கொலை செய்துள்ளார்!

Last Updated : Feb 7, 2018, 07:38 PM IST
கடன் தொல்லை மிகுதியால் ஒரு குடும்பமே கொலை செய்யப்பட்ட கொடூரம்! title=

கடன் தொல்லை மிகுதியால் ஹைதராபாத்தை சேர்ந்த நபர் தன் குடும்ப நபர் அனைவரையும் கொலை செய்துள்ளார்!

ஹைதராபாத்தை சேர்ந்த 35 வயது மதிப்புதக்க மால்லே ஹரிந்தர் கோந்த் என்பர் பல்மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றார். இவரது மனைவி ஜோதி(35), மகன் அபித்தஜ்(6) மற்றும் மகள் ஹாஸ்த்ரா(4) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இவரது மருத்துவமனையில் சரியான வருமானம் வராத காரணத்தால் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளார். மேலும் சமீபகாலமாக இவர் பெறும் கடன் தொல்லை காரனமாக பாதிக்கப்பட்டு வந்ததாகவும், கடன் தொல்லையால் இவருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வன்னம் இருந்ததாகவும் தெரிகிறது.

இதனால் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே இவர் தனது மருத்துவமனையினை மூடிவிட்டார். பின்னர் கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிபதற்காக குடும்பத்தோடு தற்கொலை செய்ய முயற்சித்து பின்னர் தனது மனைவி மற்றும் மக்களை கொலை செய்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது எழுந்த கூச்சலினால், விஷயம் அக்கம் பக்கத்தினர் வரை பரவியுள்ளது.

விஷயமறிந்த காவல்துறையினர் இவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் இவர் தனது குடும்பாத்தாரை தற்கொலைக்கு தூண்டியதாகவும், முடியாமல் போக அவர்களை கொலை செய்ததாகவும் தெரிகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இவர் மீது வழக்கப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்!

Trending News