Mann Ki Baat: மனதின் குரல் 100வது நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு!

Mann Ki Baat 100th Episode: பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையின் 100வது பகுதி இந்திய நேரப்படி  ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் நிலையில், இந்நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 29, 2023, 06:26 PM IST
  • பிரதமர் மோடியின் "மன் கி பாத்தின்" 100வது பகுதி வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி ஒலிபரப்பாகிறது.
  • ஐநா தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும்.
  • ஐ.நா.வின் அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் ஒளிபரப்பப்படும்.
Mann Ki Baat: மனதின் குரல் 100வது நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு! title=

வானொலி வாயிலாக ஒலிபரப்பாகும் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. பிரதமராக மோடி கடந்த 2014-ல் பதவியேற்ற பிறகு, அக்டோபர் முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 11:30 மணி வரை, ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்கிற தலைப்பில், வானொலியில் ஹிந்தியில் மக்களிடையே உரையாற்றி வருகிறார்.  வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் 100வது பகுதி, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

"பிரதமர் மோடியின் "மன் கி பாத்தின்" 100வது பகுதி வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி  ஐநா தலைமையகத்தில் உள்ள அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் நேரலை செய்யப்பட உள்ளதால், ஒரு வரலாற்று தருணத்திற்கு தயாராகுங்கள்!" ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையின் 100வது எபிசோட் ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்திய நேரப்படி ஒளிபரப்பப்படும், அது நியூயார்க்கில் ஞாயிறு நள்ளிரவு 1:30 மணிக்கு. ஐநா தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். இது ஐ.நா.வின் அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் ஒளிபரப்பப்படும்.

மேலும் படிக்க |  சைக்கிளில் 20,000 கி.மீ பயணம்.. கை இழந்த இளைஞரின் அசத்தும் செயல்!

நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம், சமூக அமைப்புகளுடன் இணைந்து, நியூஜெர்சியில் உள்ள இந்திய-அமெரிக்க மற்றும் புலம்பெயர் சமூகத்தின் உறுப்பினர்களுக்காகம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கும்  'மன் கி பாத்தின்' 100வது அத்தியாயத்தின் ஒளிபரப்பை மதியம் 1:30 மணிக்கு ஒலிபரப்ப உள்ளது.  "ஏப்ரல் 30, 2023 அன்று 0130 மணி EST மணிக்கு #MannKiBaat100 என்னும் நிகழ்ச்சியைத் தவறவிடாதீர்கள்! மாண்புமிகு  பிரதமர் நரேந்திர மோடி,  இந்த நிலழ்ச்சி மூலம் இந்தியர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களிடையே இணைந்திருக்கும் நிலையில், #MannKiBaat நிகழ்ச்சியின் முக்கிய மைல்கல்லான 100வது எபிசோடைக் கொண்டாடுவோம்" என்று அமெரிக்க கான்சிலகம் ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | காங்கிரசுக்கு இன்னும் அதிகார போதை தெளியவில்லை! காங்கிரஸை கிண்டலடிக்கும் பாஜக

பிரதமர் மோடி தொகுத்து வழங்கும் 'மன் கி பாத்' வானொலியில் நாட்டு மக்களிடயே பல்வேறு பிரச்னைகள் குறித்தும் சாதனைகளைகள் உரையாற்றி வருகிறார். இது முதன்முதலில் அக்டோபர் 3, 2014 அன்று ஒளிபரப்பப்பட்டது, மேலும் அகில இந்திய வானொலி (AIR) மற்றும் தூர்தர்ஷன் (DD) நெட்வொர்க்கில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. 30 நிமிட நிகழ்ச்சியின் 100வது பகுதி ஏப்ரல் 30 அன்று ஒளிபரப்பாகிறது. ஆங்கிலம் உள்பட நம் அரசியலமைப்பு அட்டவணையில் உள்ள 23 மொழிகள், சத்தீஸ்கரி, லடாகி உள்ளிட்ட 29 வட்டார மொழிகள், சீன மொழி, பிரஞ்சு, அரபி உள்ளிட்ட 11 வெளிநாட்டு மொழிகள் என 63 மொழிகளில் பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. 

இந்நிலையில், பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மன் கி பாத் நிகழ்ச்சியின் 100 அத்தியாயங்களைக் கொண்டாடும் வகையில் 100 ரேடியோக்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் (PM Modi) மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். கலைஞர் பட்நாயக், சுமார் ஏழு டன் மணலைப் பயன்படுத்தி 8 அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். 100 மணல் ரேடியோக்களில் பிரதமரின் மணல் சிற்பத்தையும் உருவாக்கினார். அவரது மணல் சிற்ப கலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிற்பத்தை முடிக்க அவருடன் இணைந்து பணியாற்றினர்.

மேலும் படிக்க | குடியரசு தலைவரை சந்திக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்

மேலும் படிக்க | மெரினாவில் பேனா நினைவு சின்னம்! அனுமதி வழங்கியது மத்திய அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

Trending News