வரலாறு காணாத வீழ்ச்சி...! பங்குச் சந்தைகளில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு

இது 2008 க்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

Last Updated : Mar 12, 2020, 04:49 PM IST
வரலாறு காணாத வீழ்ச்சி...! பங்குச் சந்தைகளில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு title=

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிவைச் சந்தித்துவருகிறது. சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கொரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பங்குச் சந்தைகளை ஆட்டம்காண வைத்திருக்கிறது. வியாழக்கிழமை காலை முதல் ஒரு பெரிய வீழ்ச்சியுடன் திறந்தது. உலக சுகாதார நிறுவனம் (WHO) கொரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாக அறிவித்த பின்னர் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் குறைந்து 32,778 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 868 புள்ளிகள் குறைந்து 9,590 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இது இந்த ஆண்டின் மிகப்பெரிய சரிவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெறப்பட்ட தகவல்களின்படி, டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் வங்கி, டி.சி.எஸ் மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை வியாழக்கிழமை வீழ்ச்சியின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதேபோல், பாரத் பெட்ரோலியம், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட், மஹிந்திரா & மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், ஓஎன்ஜிசி மற்றும் கெயில் ஆகியவை நிஃப்டியில் குறிப்பிடத்தக்க இழப்பை சந்தித்துள்ளன.

சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே இந்த சரிவிற்கு முக்கிய காரணம் என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார மந்தநிலை கூடுதல் காரணம். இந்தியா மட்டுமின்றி ஜப்பான் உள்ளிட்ட மேலும் சில ஆசிய நாடுகளும் பங்கு சந்தைகளில் சரிவை சந்தித்திருக்கின்றன.

இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 3,204.3 புள்ளிகள் சரிந்து 32,493.10 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. நிஃப்டி 950.4 புள்ளிகள் சரிந்து 9,508.00 புள்ளிகள் என்ற பரிதாப நிலையை அடைந்தது. பங்கு சந்தையின் தொடர் சரிவால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.11.42 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News