PNB Scam: மெஹுல் சோக்ஸி உதவியாளர் தீபக் குல்கர்னி கைது!

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் சிக்கிய மெஹுல் சோக்ஸியின் உதவியாளர் தீபக் குல்கர்னி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Nov 6, 2018, 12:49 PM IST
PNB Scam: மெஹுல் சோக்ஸி உதவியாளர் தீபக் குல்கர்னி கைது! title=

கொல்கத்தா: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் சிக்கிய மெஹுல் சோக்ஸியின் உதவியாளர் தீபக் குல்கர்னி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி வரை கடன் பெற்ற திருப்பியளிக்காமல் வெளிநாடு தப்பி சென்றதாக தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோரின் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தனித்தனியே முறைகேடு வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமாக இந்தியாவில் இருக்கும் ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. பின்னர் கடந்த அக்டோபர் 25-ஆம் நாள் ஹாங்காங்கிலுள்ள ரூ. 255 கோடி சொத்துக்களும் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்ட்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது என அமலாக்க துறை தெரிவித்துள்ளது.

அமலாக்க துறையின் அதிரடி நடவடிக்கையால் இதுவரை ரூ.4,744 கோடி மதிப்புள்ள நீரவ் மோடியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது மெஹுல் சோக்ஸியின் உதவியாளர் தீபக் குல்கர்னி, ஹாங்காங்கில் இருந்து கொல்கத்தா வந்தபோது, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஹாங்காங்கில் உள்ள மெஹுல் சோக்ஸியின் சொத்துக்களுக்கு தீபக் குல்கர்னி இயக்குனராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News