பாலியல் ரீதியான கருத்து! மன்னிப்பு கேட்ட MLA!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கே.ஆர்.ரமேஷ் குமார் கூறிய பாலியல் ரீதியான கருத்து ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2021, 10:44 PM IST
பாலியல் ரீதியான கருத்து! மன்னிப்பு கேட்ட MLA! title=

பெலகாவியில் நடந்த மாநில சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.ஆர்.ரமேஷ் குமார் மற்றும்  கர்நாடக சட்டசபை சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி ஆகியோருக்கு இடையேயான உரையாடலின் போது குமார் தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சையை கிளைப்பியுள்ளது. 

சட்டப்பேரவையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து எடுத்துரைக்க அங்கு குழுமியிருந்த MLA-க்கள் அவகாசம் வழங்குமாறு  சபாநாயகரி காகேரியிடம் கோரிக்கை விடுத்தனர்.  அதற்கு சபாநாயகர் காகேரி, ஒவ்வொருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கிக்கொண்டிருந்தால் எப்படி இந்த கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் நடத்தி முடிக்க முடியும் என்று பதிலளித்தார். 

ALSO READ | Big Statement: எங்கள் முடிவில் சில தவறுகள் இருக்கலாம்! தளுதளுக்கும் அமித் ஷா

அதனையடுத்து அவர்  காங்கிரஸ் மூத்த தலைவர் கே.ஆர்.ரமேஷ் குமாரை பார்த்து "நான் இந்த சூழ்நிலையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன், என்னால் இதை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை" என்று கூறினார்.  அதற்கு பதிலளிக்கும் விதமாக எழுந்தவர் சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். முன்னாள் சபாநாயகரான கே.ஆர்.ரமேஷ் குமார், சபாநாயகர் காகேரியிடம் "பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லையெனில், மகிழ்ச்சியாக அனுபவியுங்கள், என்று ஒரு பழமொழி உள்ளது, தற்போது அந்த நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள்" என்றார்.  இதற்கு காகேரி தனது சிரிப்பின் மூலம் கே.ஆர்.ரமேஷ் குமாருக்கு பதிலளித்தார்.  இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Mla

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்ட அவர், "கற்பழிப்பு பற்றி கேலி செய்வது எனது நோக்கம் அல்ல.  எனது வார்த்தைகள் உங்களை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.  சபையின் நிலைமை மோசமாக இருந்ததால் தான் நான் அந்த வார்த்தையை பயன்படுத்தும்படி ஆகிவிட்டது, இனிமேல் நான் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவேன்" என்று கூவினார். 

ஆனால் இவர் இதுபோன்ற கருத்துக்களை கூறுவது முதன்முறையல்ல.  ஏற்கனவே சட்டசபையில் அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் அடுக்கடுக்காக கேள்வி கேட்கப்பட்டதற்கு, "கற்பழிப்புக்கு உள்ளானவரின் நிலைமை போல் இருந்தது, ஏனெனில் பலரும் அவர்களிடம் இந்த சம்பவம் குறித்து மீண்டும் மீண்டும் கேள்விகள் எழுப்பியிருப்பார்கள்" என்று இவர் கூறிய ஆடியோ வைரலாகி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | நோயாளியின் சிறுநீரகத்தில் இருந்த 156 கற்களை அகற்றிய மருத்துவர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News