2020-ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய சில நாட்களே மீதம் உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
2020-21ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து இத்தகு விமர்சனம் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் இன்று தனது டுவிட்டரில் பக்கத்தில் ராகுல் தெரிவிக்கையில்., நாட்டில் 2020-21-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் தொடர்பான தேவை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதுவும் தெரியவில்லை.
Modi & his dream team of economic advisors have literally turned the economy around.
Earlier:
GDP: 7.5%
Inflation: 3.5%Now:
GDP: 3.5%
Inflation: 7.5%The PM & FM have absolutely no idea what to do next. #Budget2020
— Rahul Gandhi (@RahulGandhi) January 29, 2020
முன்பு நாட்டின் பொருளாதார நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதமும், பணவீக்கம் 3.5 சதவீதமாக இருந்தது. தற்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 சதவீதமும், பணவீக்கம் 7.5 சதவீதமாக உள்ளது.
பிரதமர் மோடி மற்றும் அவரது பொருளாதார நிபுணர் ஆலோசர்கள் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கவிழ்த்து விட்டனர், மேலும் நாட்டில் அடுத்து என்ன செய்யவேண்டும் எனவும் தெரியாமல் விழி பிதுங்குகின்றனர் என ராகுல் விமர்சித்துள்ளார்.
---மத்திய பட்ஜட் 2020---
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21-ஆம் ஆண்டுக்கான மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தின் பொது பட்ஜெட்டை 2020 பிப்ரவரி 1-ஆம் தேதி முன்வைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் அமர்வு ஏப்ரல் வரை தொடரலாம் எனவும் கூறப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர், புது வீடு வாங்குபவர்களுக்கு வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சியை மந்தநிலையில் இருந்து மீட்டெடுக்கவும், அன்னிய முதலீடுகளை ஈர்க்கவும், கடந்த செப்டம்பரில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் பட்ஜெட்டில் நடுத்தர வரக்கத்தினர், 10% அளவுக்கு வருமான வரிச்சலுகை அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ரியல் எஸ்டேட் தொழிலை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக வீடு வாங்குபவர்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில், பட்ஜெட்டில் சலுகைகள் இருக்காலம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற பட்ஜெட் அமர்வு ஆனது 2020 ஜனவரி 31 முதல் தொடங்கும் எனவும், ஏப்ரல் மாதம் வரை இயங்கும் எனவும் தெரிகிறது. மேலும் இந்த பட்ஜெட் அமர்வு ஆனது இரண்டு பகுதிகளாக இருக்கும் எனவும், முதல் அமர்வு ஜனவரி 31 முதல் தொடங்கி பிப்ரவரி 7 வரையிலும், இரண்டாவது அமர்வு மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது.