பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் BJP எதையும் சாதிக்கவில்லை: சிதம்பரம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாரதிய ஜனதா கட்சி எதையும் சாதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்! 

Updated: Nov 8, 2018, 06:35 PM IST
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் BJP எதையும் சாதிக்கவில்லை: சிதம்பரம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாரதிய ஜனதா கட்சி எதையும் சாதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்! 

கடந்த 2016 ஆம் ஆண்டு இதே நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்திட்டத்தால் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பணமின்றி தவித்தனர். ATM வாசல்களில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. 

இந்த பணமதிப்பிலப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில், ஒவ்வொரு தலைவர்களும் தங்களின் 
ப. சிதம்பரம், “பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. மாறாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர் ,தொழில்துறை பலவீனமடைந்துவிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாரதிய ஜனதா கட்சி எதையும் சாதிக்கவில்லை. 

மோடி தலைமையிலான அரசு தோல்வியை அடைந்துவிட்டது. ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வந்தால் அரசியலமைப்புக்கு விரோதமானது. இதனிடையே  மாநில அளவில் கூட்டணி அமைத்ததால் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும் என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் கூட்டணி பற்றி அகில இந்திய காங்கிரஸ் முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.