கறுப்புப் பணம்: மோடி அரசின் பெரிய வெற்றி; சுவிஸ் வங்கிக்கணக்கின் முதல் பட்டியல்..

சுவிஸ் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் முதல் பட்டியலை பெற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு. 

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Oct 7, 2019, 05:22 PM IST
கறுப்புப் பணம்: மோடி அரசின் பெரிய வெற்றி; சுவிஸ் வங்கிக்கணக்கின் முதல் பட்டியல்..
File photo

புதுடெல்லி: கறுப்புப் பணம் (Black money)  தொடர்பாக மோடி தலைமையிலான மத்திய அரசு (Modi Govt) பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. சுவிஸ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் முதல் பட்டியலை மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு இன்னும் கூடுதல் கணக்குகள் கிடைக்கும். வங்கி கணக்குகள் தொடர்பான முதல் தகவல்களை சுவிட்சர்லாந்து அரசு இந்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. சுவிஸ் வங்கியில் திறக்கப்பட்ட இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து அரசாங்கத்திடம் இருந்து இந்த தகவலைப் பெறும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

தானியங்கி தகவல் பரிமாற்ற கட்டமைப்பின் (AEOI) கீழ் முதன்முறையாக தரவை இந்திய அரசாங்கம் பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் பெடரல் வரி நிர்வாகம் (FTA) கணக்கு வைத்திருப்பவர்களின் தகவல்களை 75 நாடுகளுடன் பகிர்ந்துள்ளது. வங்கிகள், அறக்கட்டளைகள் உட்பட சுமார் 7500 நிறுவனங்கள் பெடரல் வரி நிர்வாகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

முன்னதாக, செப்டம்பர் 8 ஆம் தேதி சுவிட்சர்லாந்து ஒரு தானியங்கி முறையின் கீழ் இந்தியாவுக்கு சில தகவல்களைக் கொடுத்தது. இந்த பட்டியலில் முடித்துவைக்கப்பட்டுள்ள கணக்குகள் பற்றிய தகவல்கள் இருந்தாலும். இந்த ஆண்டு ஜூன் மாதம் சுவிஸ் அரசு வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருந்த 50 இந்திய தொழிலதிபர்களின் பெயர்களை வெளியிட்டது. சுவிஸ் வங்கி அதிகாரிகள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அவர்களில் பெரும்பாலோர் கொல்கத்தா, மும்பை, குஜராத் மற்றும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இந்திய கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை சுமார் 31 லட்சம் நபர்களின் வங்கி கணக்கு தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.