மத்திய அரசின் OBC பிரிவு பட்டியல் தொடர்பான திருத்த மசோதா; முழு விபரம்

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாளில், மத்திய அரசு 127 வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்த உள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 9, 2021, 09:43 AM IST
  • அரசியலமைப்பு திருத்த மசோதாவை அரசு அறிமுகப்படுத்தும்
  • இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்கலாம்
  • OBC பட்டியல் தயாரிக்கும் உரிமையை மாநிலங்கள் பெறும்
மத்திய அரசின் OBC பிரிவு பட்டியல் தொடர்பான திருத்த மசோதா; முழு விபரம் title=

புதுடெல்லி: மத்திய அரசு இன்று இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தொடர்பாக இரண்டாவது முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாளில்,  127 வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தும். OBC பட்டியலை தயாரிக்கும் உரிமையை மாநிலங்கள் பெற வகை செய்யும் இந்த மசோதாவுக்கு, சமீபத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில், தற்போது பெகாசஸ் மற்றும் விவசாயிகள் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியை ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் (Mansoon Seesion of Parliament) கூச்சல் குழப்பம் இருந்தபோதிலும், இடஒதுக்கீடு தொடர்பான இந்த மசோதாவை எந்த அரசியல் கட்சியும் எதிர்க்காது என்பதால், 127 வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் அதிக தடைகள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், குழப்பங்களுக்கு மத்தியில் அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவது மத்திய அரசுக்கு சற்று கடினமாக இருக்கலாம். 

ALSO READ | ஐநா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்

 

மத்திய அரசு (Central Government) மட்டுமே ஓபிசி பட்டியலை தயாரிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு மே 5 ஆம் தேதி கூறியிருந்தது. ஆனால், மத்திய அரசு அதை எதிர்த்தது. இப்போது மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசியலமைப்புத் திருத்தம் மூலம் மாற்றியமைக்கப் போகிறது. அரசியலமைப்பின் 342-ஏ மற்றும் 366 (26) -சி சட்டத் திருத்தங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பிறகு, மாநிலங்களுக்கு OBC பட்டியலை (OBC) தயாரித்து அறிவிக்க உரிமை கிடைக்கும்.

ALSO READ | பிரதம மந்திரி ஏழை நல்வாழ்வு உணவு திட்ட பயனாளிகளுடன் இன்று பிரதமர் உரையாடல்

மே 5 ம் தேதி இடஒதுக்கீடு வழக்கில் கொடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் கோரிய மத்திய அரசின் மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது 

கடந்த வாரம் மருத்துவக் கல்வியில் ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு அறிவித்தது. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கையில் ஓபிசி பிரிவு (OBC Category) மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு (EWS)  மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு வழங்க கடந்த வார தொடக்கத்தில் மத்திய அரசு முடிவு செய்தது. இதை அடுத்து அனைத்து மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளிலும் அகில இந்திய ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ், ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகிதமும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவு மாணவர்கள் 10 சதவிகித இட ஒதுக்கீடும் பெறுவார்கள்.

ALSO READ | ட்விட்டரில் அசத்தும் பிரதமர் மோடி: 70 மில்லியனைத் தாண்டியது ஃபாலோயர்களின் எண்ணிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News