புது டெல்லி: தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் ஏதாவது இருக்கிறதா? மத்திய அரசுக்கு ஏதாவது கோரிக்கை வந்த வந்ததா? தமிழ்நாடு இரண்டாக பிரிக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என தமிழ்நாடு எம்பிக்கள் டி. ஆர்.பாரிவேந்தர் மற்றும் எஸ்.ராமலிங்கம் ஆகியோர் எழுத்துபூர்வமாக கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அவர் அளித்த பதிலில், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் வகையில் எந்த கோரிக்கையும் வரவில்லை. தற்போது எந்த பரிசீலனையும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, திமுக-வை அச்சுறுத்த வேண்டும் என கொங்கு நாடு (Kongu Nadu) குறித்து பாஜகவினர் மத்தியில் பேசப்பட்டது. அதனை நிரூபிக்கும் விதமாக மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற எல். முருகனை (L. Murugan) தனது சுயவிவரக் குறிப்புகளில், "கொங்கு நாடு" என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. மேலும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த வானதி சீனிவாசன், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார். அதேபோல தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதையெல்லாம் பார்க்கும் போது, தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் நோக்கில் பாஜக மேலிடம் செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுந்தது. தமிழ்நாடு இரண்டாக பிரிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இருப்பதாக செய்திகளும் வெளியாகின.
ALSO READ | ஒன்றியம் Vs கொங்கு நாடு... தனி மாநிலம் சாத்தியமா..!
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இது பலர் தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதிக்கத் தொடங்கினார்கள். திமுக (DMK)"கொங்கு நாடு" விவகாரத்தை கடுமையாக எதிர்த்தது. மேலும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் கொங்கு நாடு பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
தற்போது நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் மட்டும் திமுக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதேநேரத்தில் மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. கோவை மாவட்டத்தை பொறுத்த வரை திமுகவுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியவில்லை. அதேநேரத்தில் பாஜக (BJP) இரண்டு தொகுதிகளில் வெற்றியும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Tamil Nadu BJP Head: தமிழக பாஜகவின் தலைவரானார் அண்ணாமலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR