மும்பையில் 5 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையின் பைகுல்லா பகுதியில் உள்ள மௌலானா ஆசாத் அலி சாலையின் பக்மோடியா தெருவில் 70 வருட பழமையான 4 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டடம் இருந்துள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் திடீரென்று இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கிட்டத்தட்ட 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 - 35-க்கும் அதிகமானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த கட்டடம் 70 ஆண்டு பழமை வாய்ந்தது. குறைந்த பட்சம் 10 குடும்பங்கள் அந்த கட்டிடத்தில் வாழ்ந்து வந்தனர்.
தற்போது, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்தில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வசதியும் தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த சில நாட்களாக மும்பையில் பெய்து வந்த கனமழையால், சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது