2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது NCP; சரத் பவார் பேரனுக்கு சீட்

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேசியவாத காங்கிரஸ்

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Mar 15, 2019, 07:58 PM IST
2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது NCP; சரத் பவார் பேரனுக்கு சீட்

48 மக்களவை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. அதில்  காங்கிரஸ் 26 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே இரண்டு கட்சிகளும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் 12 தொகுதிக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சரத் பவாரின் மகள் சுப்பிரியா சுலேவுக்கு (Supriya Sule) பாராமதி தொகுதி ஒதுக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் 5 தொகுதிக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. அதில் சரத் பவாரின் பேரன் பாரத் பவார் (Parth Pawar)  மாவல் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.