பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சரை பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர்

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவை பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2018, 07:25 PM IST
பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சரை பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர் title=

கடந்த ஜூலை 25-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் பிரதமர் வேட்பாளரான இம்ரான் கான் பாகிஸ்தானின் புதிய பிரதமாராக பதவியேற்ற விழாவில் முன்னால் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியின் அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்து சென்றிந்தார்.

அந்த விழாவில் பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி அணைத்து அன்பை பகிர்ந்துகொண்டார். பாகிஸ்தான் ஆக்கரமிப்பு காஷ்மீரின் அதிபர் மசூத் கான் அமர்ந்திருந்த முன் வரிசையில் சித்தும் அமர்ந்திருந்தார். இந்த சம்பவங்களுக்கு சமூக வலைதளங்களில், குறிப்பாக பா.ஜ. கட்சியை சேர்ந்தவர்கள் பெரும் கண்டனம் தெரிவித்தனர். இதுக்குறித்து தொலைகாட்சிகளிலும் விவாதங்கள் நடைபெற்றனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த நவ்ஜோத் சிங் சித்து, இம்ரான் கான் பதவியேற்ற விழாவிவில் கலந்துக்கொள்ள 10 முறை எனக்கு அழைப்பு வந்தது. நான் மத்திய அரசிடம் அனுமதி தருமாறு கேட்டிருந்தேன். ஆனால் எனக்கு எந்த பதிலும் வரவில்லை. காத்திருந்தேன். இரண்டு நாட்கள் கழித்து பாகிஸ்தான் செல்ல தங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் என்னிடம் கூறினார். அனுமதி கிடைத்ததினால் தான் அங்கு சென்றேன். அங்கு சென்றது எந்தவித அரசியல் காரணமும் இல்லை. நண்பர் இம்ரான் கானின் அழைப்பை ஏற்று தான் சென்றேன். பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி அணைத்தது என்பது உணர்வு பூர்வமான நிகழ்ச்சியே எனக் கூறினார். அதேபோல முன்வரிசையில் மசூத் கானுடன் அமர்ந்திருந்தது, பதவியேற்ப்பு விழா தொடங்குவதற்கு முன்பாக எனது இடம் மாற்றப்பட்டு, முன் வரிசையில் இடம் ஒதுக்கியதால், அங்கு அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என தன்மீதான விமர்சனத்தை குறித்து விளக்கம் அளித்தார்.

 

இந்நிலையில், இன்று பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது பதவியேற்பு விழாவுக்கு வந்ததற்காக சித்துவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர் மீதான விமர்சனம் துர்வஷ்டமானது. அமைதியை விரும்பாதவர்கள் தான் அப்படி செய்வார்கள். அவர் அமைதிக்கான தூதர் ஆவார். இருநாடுகளும் முன்னேற ஒரே வழி அமைதி மட்டும் தான் எனக் கூறியுள்ளார்.

Trending News