மாலத்தீவில் இருந்து 698 இந்தியர்களுடன் வீடு திரும்பும் INS ஜலஷ்வா போர்க்கப்பல்

வெள்ளிக்கிழமை, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் ஐ.என்.எஸ் ஜலஷ்வா மாலத்தீவில் வசிக்கும் 698 இந்தியர்களை அழைத்து வர சென்றுள்ளது. அவர்கள் இன்று வீடு திரும்புகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 9, 2020, 06:01 AM IST
மாலத்தீவில் இருந்து  698 இந்தியர்களுடன் வீடு திரும்பும் INS ஜலஷ்வா போர்க்கப்பல் title=

தூத்துக்குடி: கொரோனாவின் வளர்ந்து வரும் மாற்றங்களுக்கு மத்தியில், வெளிநாடுகளில் வாழும் இந்திய குடிமக்களை திரும்பப் பெறுவதில் அரசாங்கம் மும்முரமாக உள்ளது. வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்ப விரும்புவோரை "வந்தே பாரத் மிஷனின்" கீழ் அரசாங்கம் திரும்ப அழைத்து வருகிறது. மாலத்தீவில் வசிக்கும் சுமார் 27,000 இந்தியர்களில் 4500 பேர் இந்தியா திரும்புவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் ஐ.என்.எஸ் ஜலஷ்வா மாலத்தீவில் வசிக்கும் 698 இந்தியர்களை அழைத்து வர சென்றுள்ளது. அவர்கள் இன்று வீடு திரும்புகிறார். மறுபுறம், இந்தியாவில் இருந்து ஒரு சிறப்பு விமானம் பஹ்ரைனின் மனாமாவிலிருந்து 177 இந்திய பிரஜைகளை ஏற்றிக்கொண்டு கொச்சின் சர்வதேச விமான நிலையத்தை அடைந்துள்ளது.

 

இதில் 595 ஆண்களும் 103 பெண்களும் உள்ளனர். இவர்களில் 19 கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர். ஆதாரங்களின்படி, ஐ.என்.எஸ் ஜலாஷ்வ் மற்றும் ஐ.என்.எஸ் மாகர் 1800-2000 பேரை மாலத்தீவில் இருந்து வெளியேற்றுவர். அது நான்கு முறை பயணம் மேற்கொள்ளும். அதில் இரண்டு பயணசுற்றுகள் கொச்சிக்கும், இரண்டு சுற்றுகள் தூத்துக்குடிக்கும் இருக்கும். முதலில், அதிக தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்திய மக்கள் இங்கு 200 தீவுகளில் வாழ்கின்றனர். கொரோனாவின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு மாலத்தீவும் இந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவின் கீக்ஷ்க்கீழ் இருக்கிறது. 

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான மத்திய அரசாங்கத்தின் "வந்தே பாரத் மிஷனின்" இரண்டாம் கட்டம் மே 15 முதல் தொடங்கி ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இந்திய மக்களை நாடு திரும்ப உள்ளானர். சுமார் 67 ஆயிரம் 833 பேர் வீடு திரும்ப மத்திய அரசாங்கத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. முதல் கட்டமாக 64 நாடுகளின் மூலம் 12 நாடுகளைச் சேர்ந்த 15,000 பேரை அழைத்து வரும் முயற்சி  வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் 14 விமான நிலையங்கள் வந்தே பாரத் மிஷனில் பயன்படுத்தப்படும், இதில் போத் கயா, திருப்பதி, குவாஹாட்டி, பாக்டோகிரா, லக்னோ, ஸ்ரீநகர், சண்டிகர் போன்ற சிறிய விமான நிலையங்களும் அடங்கும். மக்களை தங்கள் சொந்த இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கான இலக்கை மனதில் வைத்து இவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களில் குடியேற்ற வசதிகளையும் அரசாங்கம் வழங்கும்.

முதல் கட்டமாக, ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை துபாயிலல் இருந்து 182 பயணிகளுடன் கொச்சிக்கும், அபுதாபியில் இருந்து 181 பயணிகளுடன் கோழிக்கோடு வந்தடைந்தது. இந்த பயணிகள் அனைவரும் புறப்படுவதற்கு முன்பு விரைவான ஆன்டிபாடி சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். வெள்ளிக்கிழமை, சிங்கப்பூரிலிருந்து 234 பயணிகள் டெல்லிக்கு வந்தனர், டாக்காவிலிருந்து 168 பேர் ஸ்ரீநகரை அடைந்தனர்.

முதல் கட்டமாக வளைகுடா நாடுகளில் இருந்து மொத்தம் 27 விமானங்கள், யுஏஇ-யிலிருந்து 11, சவுதி அரேபியா மற்றும் குவைத்திலிருந்து தலா ஐந்து மற்றும் பஹ்ரைன், கத்தார் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து தலா இரண்டு விமானங்கள் இயக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், தென்கிழக்கு ஆசியாவிலிருந்து சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து ஐந்து விமானங்களும், மலேசியாவிலிருந்து நான்கு விமானங்களும் வரும். இதேபோல், ஏழு விமானங்கள் அமெரிக்கா, நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நான்கு நகரங்களிலிருந்து வரும். அதே நேரத்தில் லண்டனில் இருந்து ஏழு விமானங்களும் இயங்கும்.

Trending News