10ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்... இந்து அறநிலையத் துறையில் வேலை

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணியில் செயல் அலுவலர் பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 27, 2022, 08:05 PM IST
  • வேலை வாய்ப்பு தகவல்
  • இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு
10ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்... இந்து அறநிலையத் துறையில் வேலை title=

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு (11.9.22) 

தாள் 1:தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு. பொது அறிவித்  தேர்வு நடைபெறும்

தாள் 2: இந்து மதம், சைவமும், வைணமும் குறித்த தேர்வு நடைபெறும்

எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்படும் எனவும், அதனையடுத்து காலிப்பணியிடங்கள், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசையின் படி மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

அரசு கல்வி நிலையத்திலோ அல்லது அரசு உதவி பெறும் கல்வி நிலையத்திலோ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழ் புலவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

யாருக்கு முன்னுரிமை: 

மதம் மற்றும் சமய நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்:

36 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் ஜூன் மாதம் 18ஆம் தேதி ஆகும்

வயது வரம்பு: 

01.07.2022 அன்று, விண்ணப்பதாரர் 25க்கு கீழ் இருக்கக் கூடாது. 

42 வயது நிறைவடையாமல் இருக்கும் ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற கைம்பெண்கள் விண்ணப்பிக்கலாம். 

மேலும் படிக்க | LPG Subsidy: சிலிண்டர் மானியம் வரலயா? இப்படி செக் பண்ணுங்க

39 வயது நிறைவடையாமல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  விண்ணப்பிக்கலாம். 37 வயது நிறைவடையாமல் இருக்கும் ஏனைய பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பைவிட கூடுதலாக 10 ஆண்டுகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.

மேலதிக தகவல் வேண்டுவோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம், அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் மாலை  5.45 மணிவரைதொடர்பு கொள்ளலாம். 

மேலும் படிக்க | Financial Tips: பணத்தை திட்டமிட்டு சேமித்து பணக்காரர் ஆக சில டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News