இந்தியாவின்14-வது குடியரசு தலைவராக வரும் 25-ம் தேதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்க்க உள்ளார்.
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி அன்று நடைபெற்றது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை நேற்று (ஜூலை20) நடைபெற்றது. ஆரம்ப முதலே ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக மொத்தமுள்ள 10,98,882 வாக்குகளில் 7,02,644 லட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்று ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார்.
ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற மக்களவை செயலாளருமான அனூப் மிஷ்ரா நேற்று மாலை ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
இதனையடுத்து, வருகிற 25-ம் தேதி ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இதற்கான பதவி ஏற்பு விழா பாராளுமன்றத்தில் அமைந்துள்ள மைய மண்டபத்தில் நடைபெறும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்க்கு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என தெரிவிக்கபட்டுள்ளது.