போலீசாரின் ஆயுதங்களை திருடி, தீவிரவாத குழுக்களுக்கு விற்பனை செய்த வழக்கில், மணிபூர் என்.ஐ.ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் போலீசாரின் ஆயுதங்களை திருடி, உள்ளூர் தீவிரவாத குழுக்களுக்கு விற்பனை செய்த வழக்கில், மணிபூர் எம்.எல்.ஏ.வை, தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் கைது செய்துள்ளனர்.
இம்பாலில் உள்ள மணிப்பூர் ரைஃபிள்ஸ் பட்டாலியன் 2 வது பிரிவுக்கு சொந்தமான 56 துப்பாக்கிகளும், தோட்டாக்களும் காணமால் போனதாக புகார் எழுந்தது. 2016-17 காலக்கட்டத்தில் துப்பாக்கிகள் காணாமல் போனது தொடர்பாக விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், பல்வேறு நபர்களை கைது செய்தனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அடிப்படையில், மணிபூர் எம்.எல்.ஏ. Yamthung Haokip வீட்டில் சோதனை செய்து, அங்கிருந்து சில துப்பாக்கிகளை கைப்பற்றினர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட யாம்துங் ஹாவோகிப், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.