புதுடெல்லி: 5 மாநில தேர்தலில் பாஜக-வுக்கு பெரும்பாண்மை கிடைத்ததை அடுத்து பங்கு சந்தைகள் புதிய உயர்வை எட்டியுள்ளது.
நிப்ஃடி புள்ளிகள் உயர்ந்து 9,091 என்ற அளவில் வர்த்தமாகிறது. சென்செக்ஸ் 560 புள்ளிகள் அதிகரித்து 29,481 என்ற அளவில் வர்த்தகமாகிறது. பங்குச்சந்தை உயர்வை அடுத்து ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எப்.சி., ஐ.டி.சி. பங்குகள் அதிகப்பட்ச உயர்வை எட்டியுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 காசுகள் உயர்ந்து 66 ரூபாயாக உள்ளது.
இந்நிலையில் 5 மாநில பேரவை தேர்தலில் பாஜவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதிய நிலையில் அதை பொய்யாக்கி பாஜக அமோக வெற்றி பெற்றது.
இன்று பங்குச்சந்தை தொடங்கும்போது வணிக புரட்சி ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதினர். இந்திய பங்குகள், பாண்டுகள், பண மதிப்பு அதிக ஆதாயம் பெறும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் 10 ஆண்டுக்கான பாண்டுகள் அதிக ஆதாயம் பெறும் என்றும், இந்திய நிப்டி சென்சக்ஸ் 9 ஆயிரம் புள்ளிகளை தொடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் நிப்ஃடி 9,091 புள்ளிகளை தொட்டது.