கொரோனா தொற்றால் நாடு இக்கட்டான நிலைக்கு சென்றபோது பணத் தேவை காரணமாக PM Cares அறக்கட்டளை நிறுவப்பட்டது. மக்கள் நாட்டிற்காகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் இந்த அறக்கட்டளைக்கு பணம் அனுப்புமாறு விளம்பரம் செய்யப்பட்டது. அதில் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் இடம்பெற்றிருந்தது.
ஆனால் கொரோனா தொற்று (Coronavirus) உச்சத்தை அடைந்தபின்னரும் அந்த அறக்கட்டளையிலிருந்து பணத்தை செலவு செய்யாததால் அது என்ன ஆனது என மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். இது தொடர்பான தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் சமயக் கங்வால் என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் இதற்கு பதில் அளிக்க ஒன்றிய அரசு மறுத்துவிட்டது.
ALSO READ | கொரோனா மூன்றாம் அலை: PM Cares நிதியில் 1213 ஆக்ஸிஜன் ஆலைகள்
அதனைத் தொடர்ந்து மனுதாரர் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். PM Cares அறக்கட்டளையில் வெளிப்படை தன்மை வேண்டும் என்றும், அதற்கு அனுப்பப்பட்ட பணம் என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் கோரியிருந்தது.
இதற்கு பதிலளித்திருக்கும் பிரதமர் அலுவலகம், PM Cares அரசு நிதி அல்ல என்றும், அது ஒரு தனி அறக்கட்டளை என்பதால் அதனை அரசு உட்பட யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் PM Caresக்கு மக்கள் தானாக விரும்பிதான் பணம் அளித்தார்கள் என்று கூறியுள்ள பிரதமர் அலுவலகம், இது தொழில்சார்ந்த அறக்கட்டளை அல்ல என்றும் கூறியுள்ளது.
#PMCares not a government fund?
How come they using GOI logo and GOI email ids?? pic.twitter.com/FJ2i8Db6tM— Anu Mittal (@anushakunmittal) September 23, 2021
அரசுப் பணியாளர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை அரசு அலுவலகங்கள் PM Cares Fundக்கு அனுப்பிய நிலையில் தற்போது ஒன்றிய அரசு இவ்வாறு பதிலளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களால் மக்களுக்காக அனுப்பப்பட்ட பணத்தின் மேல் அரசுக்கு கட்டுப்பாடு இல்லை என்று கூறுவது எப்படி சரி என இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ALSO READ | கொரோனா தொற்றால் மனதளவில் அதிக பாதிப்பு 'இந்த' வயதினருக்கு தான்: ஆய்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR