நாங்கள் தயார்; நீங்கள் தயாரா?... MP முதல்வர் கமல்நாத் சவால்!

பாஜக-வின் கோரிக்கையை ஏற்று தாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தயாரா உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத் தெரிவித்துள்ளார்!

Last Updated : May 21, 2019, 06:13 AM IST
நாங்கள் தயார்; நீங்கள் தயாரா?... MP முதல்வர் கமல்நாத் சவால்! title=

பாஜக-வின் கோரிக்கையை ஏற்று தாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தயாரா உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத் தெரிவித்துள்ளார்!

மத்திய பிரதேச மாநிலத்தில் மைனாரட்டி அரசு நடைபெறுவதாகவும், அம்மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை தொடர பெரும்பாண்மை நிரூபிக்க வைண்டும் எனவும் பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தாங்கள் வாக்கெடுப்பிற்கு தயாராக இருப்பதாவும், அதேப்போல் பாஜக தயாராக இருக்கின்றதா? எனவும் அம்மாநில முதல்வர் கமல்நாத் பாஜக-விற்கு சவால் விடுத்துள்ளார்.

மேலும் அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடங்கிய நாள் முதல் பாஜக-வினர் போலி நாடகம் ஆடி வருவதாகவும் கமல்நாத் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து கமல் நாத் தெரிவிக்கையில் "ஆட்சி துவங்கிய முதல் நாள் முதல் பாஜக-வினர், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு எவ்வாறு இடையூறு கொடுக்க முடியும் என ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த 5 மாதங்களில் 4 முறை நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். 4 முறையும் காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது மீண்டும் கோருகின்றனர், கவலை இல்லை நாங்கள் மீண்டும் நிரூபிப்போம். தொடர்ந்து இவ்வாறான இடையூறு செய்து வருவதன் மூலம் தங்களை பிரபலம் செய்துகொள்கிறார்கள், அவ்வளவுதான்" என பகிரங்கமாக பாஜக-வினரை விமர்சித்துள்ளார்.

முன்னதாக இம்மாநில எதிர்கட்சி(பாஜக) ஆளுநர் அனந்தீபன் பட்டேல் அவர்களுக்கு, மாநிலத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என கடிதம் எழுதினர். இதனை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் கோபால் பார்கவ்., மத்திய பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது. தங்களது ஆட்சியை தொடர அவர் நிச்சையம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியாக வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு 3 அல்லது 4 வாக்குகளே கிடைக்கும், பாஜக பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். கோபாலின் இந்த கருத்திற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது கமல்நாத் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News