கோரக்பூர் துயரம்: நோடல் அதிகாரி நீக்கம்!

Last Updated : Aug 14, 2017, 10:53 AM IST
கோரக்பூர் துயரம்: நோடல் அதிகாரி நீக்கம்! title=

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையும் சேர்ந்து செயல்படுகிறது. 

இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இதுவரை 70 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து உ.பி., அரசு  நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து உ.பி அரசாங்கம் அக்கல்லூரி நோடல் அதிகாரி Dr. கபில் கான் -வை நீக்கம் செய்துள்ளது.  

முன்னதாக நேற்று பிஆர்டி அரசு மருத்துவமனையை பார்வையிட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் சென்றனர். மருத்துவமனையில் நிலவிவரும் சூழ்நிலை தொடர்பாக ஆய்வு செய்தனர். குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்ட்டுக்கு சென்று குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

Trending News