ராமர் பற்றி பிரதமர் சர்மா ஒலி தெரிவித்தது அரசியல் ரீதியான கருத்து அல்ல..!

ராமாயணம் குறித்த ஆய்வுகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே ஷர்மா ஒலி பேச்சின் நோக்கம் என நேபாள வெளியுறவுத்துறை விளக்கம்..!

Updated: Jul 15, 2020, 07:09 AM IST
ராமர் பற்றி பிரதமர் சர்மா ஒலி தெரிவித்தது அரசியல் ரீதியான கருத்து அல்ல..!

ராமாயணம் குறித்த ஆய்வுகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே ஷர்மா ஒலி பேச்சின் நோக்கம் என நேபாள வெளியுறவுத்துறை விளக்கம்..!

ராமரின் பிறப்பிடமாக கோடிக்கணக்கான இந்துக்களால் நம்பப்படும் உபி யில் உள்ள அயோத்தி நகரம் அவரது பிறப்பிடம் இல்லை என்றும், காத்மண்டு அருகே உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம் தான் ராமரின் உண்மையான பிறப்பிடம் என நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராமர் தெரிவித்த கருத்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

அதுமட்டுமின்றி, இறைவன் ராமர் ஒரு நேபாளி என்றும், அவர் இந்தியர் அல்ல என்றும் ஒலி கூறியிருந்தார். இந்த கருத்து இந்தியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வால்மிகி ராமாயணத்தை நேபாளத்தில் மொழி பெயர்த்த கவிஞர் பானுபகத்தாவின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் சர்மா ஒலி, கலாச்சார ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக நேபாளம் இருப்பதாகவும், தங்களது நாட்டின் வரலாறு திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்திருந்தார்.

READ | உண்மையில் கடவுள் ராமர் ஒரு நேபாளி; இந்தியர் அல்ல: நேபாள PM ஒலி!

இந்திய இளவரசருக்கு நாம் சீதையை மணமுடித்துக் கொடுத்திருப்பதாக இன்னும் நம்பிக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், அயோத்தியை சேர்ந்த இளவரசனுக்கு தான் சீதையை கொடுத்ததோமே தவிர இந்தியாவுக்கு கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில், ராமர் குறித்த பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் கருத்து, யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கதிலோ, அரசியல் நோக்கத்திலே, அயோத்தியின் பெருமையை குறைக்கும் நோக்கமோ கிடையாது கூறப்படவில்லை. 

Hindustantimes

ராமர் குறித்தும் அவரோடு தொடர்புடைய பல்வேறு கருத்துகள் நிலவி வருவதாக தெரிவித்துள்ள நேபாள வெளியுறவுத்துறை, ராமாயணம் குறித்த ஆய்வுகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே ஷர்மா ஒலி பேச்சின் நோக்கம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.