ஒடிசா மாநிலம், கியோன்ஜர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி அவரது அண்ணனின் துணையோடு, சுகிந்தா கிரோமைட் மாகாணத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றனர். தங்களது வீட்டில் இருந்து பேருந்தில் சென்ற இருவரும் தங்களது உறவினர் வீட்டின் அருகே இறங்கினர். அந்நேரம் அங்கு கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
அப்போது அவர்கள் அருகே நின்றிருந்த 5 இளைஞர்கள் சிறுமி மற்றும், அண்ணனை அருகிலுள்ள பள்ளிக்கூடத்தில் சென்று தங்குமாறும், மழை நின்றபிறகு அங்கிருந்து கிளம்புமாறும் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களின் பேச்சை கேட்டு நம்பி சிறுமியும், அண்ணனும் அவர்கள் கூறிய பள்ளி வளாகத்தில் தஞ்சமடைந்தனர். சற்று நேரத்தில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 5 பேரும் அந்த பள்ளி வளாகத்திற்கு வந்தனர்.
சதாரணமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் திடீரென சிறுமியின் அண்ணனை தாக்க முற்பட்டனர். சரமரியாக அடித்து சிறுமியின் அண்ணனை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர். பின்னர் அச்சிறுமியை பாலியல் ரீதியாக வற்புறுத்தி வன்புணர்வு செய்ய முயன்றுள்ளனர். அப்போது நிலமையை சுதாரித்துக்கொண்ட சிறுமி அந்த 5 பேரிடமிருந்தும் தப்பி பள்ளியின் மாடியை நோக்கி ஓடியுள்ளார்.
மேலும் படிக்க | சமையல் எண்ணெய் கொடுத்தால் பீர்... பண்டமாற்று முறைக்கு மாறிய ஜெர்மனி
விடாமல் பின் தொடர்ந்த 5 பேரிடமிருந்து தப்பிக்க முடியாமல் தவித்தார். அப்போது தான் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக கூடாது என்ற நோக்கத்தில் தப்பிக்கும் முயற்சியாக பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது அச்சிறுமிக்கு பலத்த காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிறுமியின் அண்ணன் கூச்சலிட்டு, உதவிக்கு அருகிலிருந்தவர்களை அழைத்து வந்துள்ளார்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த ஊர் மக்கள் அடிபட்டு கிடந்த சிறுமியை மீட்டு அருகிலுள்ள மருந்துவமனைக்கு அழைந்துச்சென்றனர். மேலும் ஊர்மக்கள் மற்றும் சிறுமியின் அண்ணன் கலிங்கா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல் ஆய்வாளர் பி.பி. ராவுட் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஊர் மக்களின் உதவியோடு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 5 இளைஞர்களை கைது செய்தனர்.
மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ