உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீட்டு கட்டிடத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர் காவல்துறையினர். பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று மாலை தீவிரவாதிகள் திடீரென காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் வீடு ஒன்றில் பதுங்கி இருந்தபடி இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்கு காவல்துறையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இருதரப்பினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிச் சண்டை நடைபெறும் நிலையில், பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்கவும் காவல்துறையினர் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
Suspected terrorist holed up by UP ATS in Thakurganj area of Lucknow. Operation in progress. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/fHDHM7b2tQ
— ANI UP (@ANINewsUP) March 7, 2017
கான்பூர் மற்றும் லக்னோ சில சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. கான்பூரில் இருந்த நபர் கைது செய்யப்பட்டார். லக்னோவில் உள்ள தாக்கூர்கஞ்ச் கட்டிடத்தில் பதுங்கி இருக்கிறார். விரைவில் அவரை கைது செய்யப்படுவார் என சட்டம் & ஒழுங்கு அதிகாரி தல்ஜித் சவுதாரி கூறியுள்ளார்.
Had received inputs about presence of some suspects in Kanpur and Lucknow, our senior officials searched:ADG (Law & Order) Daljit Chaudhary pic.twitter.com/GlOaut7h2t
— ANI UP (@ANINewsUP) March 7, 2017
Hope to arrest him soon, will interrogate thereafter: ADG (Law & Order) Daljit Chaudhary on suspect present inside building in Thakurganj pic.twitter.com/3VTWqWn9bq
— ANI UP (@ANINewsUP) March 7, 2017