புதுடெல்லி: கொரோனா வைரஸ் வெடித்ததால், ஆய்வுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் அனைத்து நாடுகளிலும், ஊரடங்கு மற்றும் சமூக தொலைதூர முறையை அமல்படுத்துவதால் 154 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்று ஐ.நா. கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) கல்விக்கான உதவி தலைமை இயக்குனர் ஸ்டெபானியா கியானினி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியில் தெரிவித்தார்.
கொரோனா பரவல் தற்காப்பு நடவடிக்கையாக, உலகின் பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்களில் 89 சதவீதத்துக்கு மேற்பட்டோர், அங்கு செல்ல முடியாமல் உள்ளனர். இந்த எண்ணிக்கையே சுமார் 154 கோடி இருக்கும். அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யுனெஸ்கோ உதவி இயக்குநர் ஜெனரல் (கல்வி) ஸ்டீபானியா கியானினி கூறுகையில், ஊரடங்கால் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு வழிவகுத்தது. இதன் காரணமாக, மாணவர்களின் கல்வி இழப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், எத்தனை மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. வசதியான குடும்பத்து பெண்கள் மட்டும் தொடர்ந்து கல்வி கற்க வாய்ப்புள்ளது.
இது, கல்வியில் பாலின இடைவெளியை அதிகரிக்கும். பாலியல் சுரண்டல் அதிகரிக்கும். சிறுவயது கர்ப்பம், கட்டாய திருமணம் ஆகியவையும் பெருகும். சில நாடுகள் காலவரையின்றி பள்ளிகளை மூடுவதற்கு தயாராகி வருவதால், கடந்த கால பிரச்சினைகளில் பெற்ற பாடங்களில் இருந்து, பெண் கல்வியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.