Owaisi: பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு இந்திய நீதித்துறையின் களங்கம்

பாபர் இடிப்பு வழக்கில் சிபிஐ (CBI) சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு   ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) தலைவரும் ஹைதராபாத் தொகுதியைச் சேர்ந்த எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 30, 2020, 04:49 PM IST
Owaisi: பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு இந்திய நீதித்துறையின் களங்கம் title=

புதுடெல்லி: பாபர் இடிப்பு வழக்கில் சிபிஐ (CBI) சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு   ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) தலைவரும் ஹைதராபாத் தொகுதியைச் சேர்ந்த எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

தீர்ப்பு குறித்த தனது அதிருப்தியை ட்விட்டரில் கவிதையாக எழுதியுள்ளார். 'கொலையாளியே தலைவர், நீதிமன்றத்தில் நீதிபதியும் அவரே...  இப்போது பல தீர்ப்புகளும் சாதகமாக வருகிறது' என்று அசாதுதீன் ஒவைசி தனது ட்விட்டரில் எழுதியுள்ளார்.

சிபிஐ நீதிமன்றத்தின் இன்றைய முடிவு இந்திய நீதிமன்ற வரலாற்றின் இருண்ட நாள் என்று அசாதுதீன் ஒவைசி கூறினார். 'மசூதியை மந்திரம் மறைந்துவிட்டதா, அதே தந்திரமும் மந்திரமும் சிலையை அங்கே கொண்டு வைத்ததா? பூட்டுகள் மந்திரக்கோலால் திறக்கப்பட்டனவா? இன்றைய தீர்ப்பானது, உச்ச நீதிமன்றத்தின் நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்புக்கு எதிரானது. அத்வானியின் ரத யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் வன்முறைச் சம்பவங்களும், கொள்ளைச் சம்பவங்களும் அரங்கேறின. அதுமட்டுமா? மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. இதிலிருந்து எதையும் யூகிக்க முடியாதா?'

அவர் கூறினார், "ஒரு அடியில் இரண்டாக்க வேண்டும் என்று உமா பாரதி கூறியது உண்மையல்லவா? பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உமா பாரதியும், அத்வானியும் இனிப்பு சாப்பிட்டது உண்மையில்லையா?" 'இந்த தீர்ப்புக்கு சிபிஐ மேல் முறையீடு செய்யுமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் AIMPLB இந்த முடிவிக்கு மேல் முறையீடு செய்யும் என்று நம்புகிறேன்' என்று ஓவைசி கூறினார். 'அந்தக் கால ஊடகவியலாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. நீதிமன்றத்தில் அவர்கள் இது ஒரு திட்டமிட்ட சதி என்று கருதுவதாக சொன்னார்கள். ஆனால் நீதிமன்றம் அவர்கள் சொன்னதை ஏற்கவில்லை.'

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6அம் தேதியன்று   இடிக்கப்பட்டது. பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சிபிஐ விசாரித்து வந்த இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேர் விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்தனர்.  

எஞ்சிய 32 பேர் மீதான வழக்கு விசாரணை கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந்தோறும் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ், குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள் | பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு: Advani, MM Joshi உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை!!

Trending News