மோடியின் விமானம் பாக்., வான்வெளியில் பறக்க அனுமதி மறுப்பு!

வரவிருக்கும் அமெரிக்க பயணத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது!

Last Updated : Sep 18, 2019, 08:48 PM IST
மோடியின் விமானம் பாக்., வான்வெளியில் பறக்க அனுமதி மறுப்பு! title=

வரவிருக்கும் அமெரிக்க பயணத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது!

பாரத பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவரது விமானத்தினை பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதிக்குமாறு இந்தியாவின் கோரிக்கை விடுத்தது. இந்தியாவின் இந்த கோரிக்கையினை பாகிஸ்தான் புதன்கிழமை மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்டை நாட்டின் இந்த முடிவு சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு சாசனத்தை மீறுவதாக கருதப்படுகிறது.

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த ஒப்புதல் கோரி புதுடெல்லி கடந்த வாரம் இஸ்லாமாபாத்துக்கு கடிதம் எழுதியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் இந்த கோரிக்கைக்கு பாகிஸ்தான் செப்டம்பர் 20-க்கு முன்னர் பதிலளிக்க வேண்டியது கட்டாயம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவின் கோரிக்கையினை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு சாசனத்தின் விதிகளின்படி, போர் அல்லது பிற அவசரகால நிலைமைகள் போன்ற ஒரு சிறப்பு சூழ்நிலை இல்லாவிட்டால், எந்தவொரு தனிப்பட்ட விமானத்தையும் பொறுத்தவரை தனி முடிவுகளை எடுக்க முடியாது. பாகிஸ்தானின் இந்த விதி மீறலுக்கும் எதிராக இந்தியா உலக அமைப்புக்குச் சென்றால், பாகிஸ்தானுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.

ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய மூன்று நாடுகளின் சுற்றுப்பயணத்திற்கு செல்லவிருந்த ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தனது வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்த ஒரு மாதத்திற்குள் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. முன்னதாக, இந்திய ஜனாதிபதியின் பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதை மறுக்கும் இந்த முடிவை நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கவனத்தின் பேரிலேயே நிகழ்ந்ததாக பாகிஸ்தான் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாக்கிஸ்தானின் இத்தகு நடவடிக்கைக்கு பதிலளித்த இந்தியா, இது ஒரு "பயனற்ற" ஒருதலைப்பட்ச நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், "VVIP சிறப்பு விமானத்திற்கான அதிகப்படியான அனுமதி மறுக்க பாகிஸ்தான் அரசு எடுத்த முடிவுக்கு வருந்துகிறோம். இத்தகைய ஒருதலைப்பட்ச செயல்களின் பயனற்ற தன்மையை அங்கீகரிக்க பாகிஸ்தான் அரசு முன்வருவதை அறிந்து வருந்துகிறோம் " என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் வான்வெளியை பிரதமர் மோடி பயன்படுத்தினார். பிப்ரவரியில் நடைப்பெற்ற பாலகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பின்னர் முதல் முறையாக, இருதரப்பு சந்திப்புக்காக பிரான்சுக்கு மோடி சென்ற போது பாகிஸ்தான் வான்வெளியை பிரதமர் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Trending News