குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நிகழ்ந்து வருகின்றது. இந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பாகிஸ்தான் குறித்து தனது கருத்தினை தெரிவித்தார், இந்நிலையில் தேர்தல் விவாதங்களில் எங்கள் நாட்டு பெயரை பயன்பட்டுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது "சதித்திட்டங்கள் மூலம் வெற்றி தேடுவதை விட்டுவிட்டு, சொந்த பலத்தில் வெற்றி பெறுங்கள். மேலும் தேர்தல் விவாதங்களில் பாகிஸ்தான் பெயரை இழுப்பதை இந்தியா நிறுத்த வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
India should stop dragging Pakistan into its electoral debate and win victories on own strength rather than fabricated conspiracies, which are utterly baseless and irresponsible.
— Dr Mohammad Faisal (@ForeignOfficePk) December 11, 2017
பாகிஸ்தானின் இக்குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுகும் வகையில் இந்தியா, தேர்தலில் போட்டியிடும் யுக்தி இந்தியர்களுக்கு கைவந்த கலை, அறிவுரை கூறுவதை பாகிஸ்தான் தான் நிறுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுவதாக குற்றம்சாட்டி இருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அண்மையில் மணிசங்கர் அய்யர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுதுறை அமைச்சர், பாகிஸ்தான் தூதரக அதிகாரி, இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் ஆகியோரை அழைத்து ரகசியமாக சந்தித்து பேசினார்.
இந்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானது அனைவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்துதான், மணிசங்கர் அய்யர் என்னை "நீச்" எனும் வார்த்தை கொண்டு இழிவுபடுத்தினார் என பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார்.