மோடி, அமித்ஷா தலைமையில் பாஜக MP-களுக்கு பயிற்சி வகுப்பு?

பாஜக எம்.பி-களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது!

Last Updated : Jul 29, 2019, 08:55 AM IST
மோடி, அமித்ஷா தலைமையில் பாஜக MP-களுக்கு பயிற்சி வகுப்பு? title=

பாஜக எம்.பி-களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது!

பாஜக எம்.பி-க்கள் அனைவருக்கும் வரும் ஆகஸ்டு 3 மற்றும் 4 தேதிகளில் புதுடெல்லியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்கவுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு மக்களவை கூட்டத்தொடர் வரும் ஆகஸ்டு 4 வரை நடைபெற உள்ளது. நடப்பு மக்களை கூட்டத்தொடரில் பல்வேறு சட்டதிருத்த மசோதாக்களை நிறைவேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. எனவே பாஜக-வின் அனைத்து எம்.பி.,க்களும் கூட்டத்தொடரில் பங்கேற்று வருகின்றனர். 

இந்நிலையில் இந்த கூட்டத்தொடரின் கடைசி 2 தினங்களில், பா.ஜ., எம்.பி.,க்களுக்கு பயற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அபியாஸ் வர்கா என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி வகுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தொடர் முடிந்த பின்னர் மக்கள் மத்தியில் சென்று ஆற்றவேண்டிய பணிகள், தொகுதி வளர்ச்சி பணிகள், அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்லுதல் போன்ற அம்சங்கள் இடம்பெறக்கூடும் என்று பாஜக மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

பயிற்சி வகுப்பு தொடர்பாக பாஜக நாடாளுமன்ற குழுவிடம் இருந்து அனைத்து எம்.பி-களுக்கும் குறுஞ்செய்தி அனுப்ப பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News